AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஃப்ரேம் பாருங்க ஜி… ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் போட்டோ

Anirudh shared a photo with AR Rahman | ரசிகர்களால் ராக்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் அனிருத் ரவிச்சந்தர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

ஃப்ரேம் பாருங்க ஜி… ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனிருத் – வைரலாகும் போட்டோ
அனிருத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Oct 2026 21:09 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தனது இசைப் பயணத்தை தொடங்கினார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). நடிகர் ரவிச்சந்தரின் மகன் தான் அனிருத். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படம் தான் 3. இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மட்டும் இன்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடும் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் 5 படங்கள் வெளியாகி உள்ளது.

அதிலும் குறிப்பாக இறுதியாக அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் 2 படம் தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் பாடல்கள் ஒரு பக்கம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்தி மொழியில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் அனிருத்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனிருத்:

அந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அனிருத் ரவிச்சந்தர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஃபிரேம் ஏ பாருங்கா ஜி. என் கோட் ஏ.ஆர். ரஹ்மான் சாருடன் எப்போதும் சிறந்த உணர்வுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Rashmika Mandann: என்ன தவறு..? அப்படிப் பார்ப்பது முட்டாள்தனம் – ராஷ்மிகா மந்தனா பேச்சு!

அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ப்ளூ டீம் கேப்டனை கேள்வி கேட்கும் போட்டியாளர்கள்.. கண்ணீரில் வினோத் பாபு – என்ன நடக்குது?

Follow Us