ஜெயிலர் 2 படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன் – வைரலாகும் பதிவு
Allu Arjun praises Jailer 2 movie | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் சமீபத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் 2 படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் 172-வது படமாக உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2 படம். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்தைப் பார்க்கும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜூன் ஜெயிலர் 2 படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்தை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜெயிலர் 2 படத்தைப் பாராட்டிய அல்லு அர்ஜுன்:
ரஜினிகாந்த் சாரின் ஸ்டார் பவர், ஸ்வாக் & ஆரவ் ஆகியவற்றின் உண்மையான காட்சி! அட்ரினலின் பம்ப் செய்யும் ஒரு வணிக பொழுதுபோக்கு. அண்ணன் அனிருத் கொலை! அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் தங்கள் இதயங்களை ஊற்றியுள்ளனர். தி ஷோமேன்
நெல்சன் தில்ப்குமார் காரு ஒரு பேங்குடன் சிறந்த வெற்றியை வழங்கினார்!
சட்டை கிழியாமல் 500 கோடியை ரஜினிகாந்தால் மட்டுமே எட்ட முடியும் என்றும் அல்லு அர்ஜுன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ராம் சரண் பட இயக்குநருடன் இணையும் சூர்யா? வைரலாகும் தகவல்
அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Jailer2 is 🔥🔥🔥
A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping!
Brother… @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG!
చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤
Congratulations to the entire team! @sunpictures
— Allu Arjun (@alluarjun) October 22, 2026
Also Read… தீபாவளிக்கு அரசன் படம் வெளியிடும் முக்கிய அப்டேட்? வைரலாகும் தகவல்!