AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Rajinikanth

Rajinikanth

இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அந்தப் படத்தில் துவக்க காட்சியிலேயே ஒரு கேட்டை திறந்து உள்ளே நுழைவார் ரஜினிகாந்த், மறைமுகமாக தமிழ் ரசிகர்கள் மனதின் உள்ளேயும் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 170 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர், மெக்கானிக், பால்காரர் என எளிய மக்களின் வேடங்களை தனக்கே உரிய ஸ்டைலில் கையாண்டு ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். ஆரம்பகால படங்களான முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். தற்போது 70 வயதைக் கடந்த பின்னும் அதே எனர்ஜியுடன் திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்க கூடிய படங்களை செய்து வருகிறார். இன்னும் அவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டு காத்திருக்கின்றனர். ரஜினிகாந்த் தொடர்பான அத்தனை செய்திகளையும் நாம் காணலாம்.

Read More

ஜெயிலர் 2 Vs ஓம்.. ஜெயிலர் 2 படத்துடனான மோதலை தனுஷ் தவிர்க்காததற்கு காரணம் இதுவா?

Jailar 2 Vs Om Clash: 2026ம் ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கும் டாப் தமிழ் படங்கள்தான் ஜெயிலர் 2 மற்றும் ஓம். இந்த படங்களானது ஒருநாள் இடைவெளியில் வெளியாகும் நிலையில், ஓம் படம் தேதியை மாற்றாமல் இருக்க காரணம் என்ன என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

ரஜினிகாந்தின் தர்மன் பட செகண்ட் ஷெட்யூல் ஓவர் – வைரலாகும் வீடியோ!

Dharman Movie Shooting: தலைவர் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகிவருவது தர்மன். இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாம். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Kayadu Lohar: விமானத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தருணம்… கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

Kayadu Lohar Shares About Rajinikanth: தென்னிந்திய மொழிகளில் தற்போது லீட் இளம் நாயகியாக இருந்துவருபவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் இம்மார்ட்டல். இப்படம் வெளியாக காத்திருக்க,கும் நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்தை விமானத்தில் சந்தித்த தருணம் குறித்து பேசியுள்ளார்.

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு – வைரலாகும் பதிவு

Jailer 2 Movie Release Update | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வைரலான நிலையில் படக்குழு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Poorna: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!

Poorna on Ala Bolelo Song Dance: தென்னிந்திய சினிமாவில் நடிகையாக பிரபலமான ஒருவர் பூர்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்றிருந்த அலா பொலேலோ பாடலில் சிறப்பு நடனமாடினார். அதில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய தருணம் பற்றி பகிர்ந்துள்ளார்.

நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Director Ashwath Marimuthu | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் அவர் தர்மன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார் என்றும் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Ala Bolelo Making Video: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், சமீபத்தில் பூர்ணாவின் நடனத்தில் அலா பொலேலோ பாடல் வெளியானது. இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் ஸ்ரேயா சரண்? வைரலாகும் போட்டோ

Is actress Shriya Saran starring in Dharman movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நடிக்கிறாரா என்ற கேள்வி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தர்மன் பட ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

Dharman Movie Shooting Update | தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக தற்போது நடித்து வரும் படம் தர்மன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஷூட்டிங் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்தின் பயோகிராஃபி எந்த நிலையில் உள்ளது? சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

Soundarya Rajinikanth talks about Rajinikanths autobiography | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் பயோகிராஃபி எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Rajinikanth: நான் மது அருந்துவதை விடுவதற்கு காரணம் அவர்தான் – ரஜினிகாந்த் தெரிவித்த விஷயம்!

Rajinikanth Quits Alcohol: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் முன்னதாக நேர்காணல் பேசிய ரஜினிகாந்த், மது அருந்துவதை எவ்வாறு விட்டேன் மற்றும் அதற்கான காரணம் யார் என்பது குறித்து விவரமாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Jailer 2 Movie: மலையாள வைப்பில்… ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் வெளியானது!

Ala Bolelo Song: இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருந்த 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவந்தார். 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (21/08/02026) இந்த படத்திலிருந்து அலா பொலேலோ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தர்மன் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்? வைரலாகும் தகவல்

Rajinikanths Dharman Movie Villain Role Update | தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் தர்மன். இந்தப் படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அலா போலேலோ ப்ரோமோ வீடியோ வெளியானது

Ala Bolelo single promo video | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Jailer 2 : விருந்து தயார்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jailer 2 Movie First Single: பான் இந்திய சினிமாவில் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த். இவர் தனது 172வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார் அதுதான் ஜெயிலர் 2. தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.