KH x RK Movie: கமல்ஹாசன்- ரஜினிகாந்த் கூட்டணி பட புரோமோ வீடியோ எப்போது?- அறிவிப்பு இதோ!
Kamal Haasan And Rajinikanth Alliance: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களாக இருந்துவருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரின் கூட்டணியானது கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோ ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவின் மிக பிரம்மாண்ட நடிகர்களாக இருந்துவருபவர்கள் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர்கள் இருவருமே சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் கதாநாயகனாகவே நடித்துவருகின்றனர். அந்த விதத்தில் 70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் இவர்கள் இருவருமே இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான திரைப்படங்கள் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவந்தது. அந்த வகையில் இவர்கள் இருவரும் எடுத்த முடிவின் காரணமாக பல ஆண்டுகளாக இணைந்து படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இணைந்து நடிக்காததன் காரணம் குறித்து முன்னேதாகவே கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த கூட்டணியானது கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தை இன்பநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் (Red Giant Movies) தயாரிக்கவுள்ளதாக, நேற்று 2026 பிப்ரவரி 19ம் தேதியில் அறிவிப்புகள் வெளியானது. அந்த விதத்தில் இப்படத்தின் புரோமோ வீடியோ, வரும் 2026 பிப்ரவரி 21ம் தேதியில், மதியம் 12:07 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: எனது வாழ்நாளிலே அப்படியொரு காட்சியில் நடிப்பேன்னு நினைக்கல- விஜய் சேதுபதி ஓபன் டாக்!
கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் கூட்டணி பட இயக்குநர் :
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இருபெரும் நாயகர்களின் கூட்டணி திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே ரஜினிகாந்தின் ஜெயிலர் 1 மற்றும் 2 படங்ககளை இயக்கியிருந்த நிலையில், தற்போது இவர்கள் கூட்டணி படத்தையும் இயக்கவுள்ளாராம். இதன் மூலமாக கமல்ஹாசனுடன் முதல் முறையாக நெல்சன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: ‘தாய் கிழவி படத்தை பற்றி மக்கள் சொல்லுவாங்க’ – படத்தை பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்!
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் படத்தின் அறிவிப்பு குறித்த பதிவு:
The Magic unfolds, for the world to witness ✨ 😎#KHxRK Promo Video from tomorrow. 12:07PM. #RedGiant17 ✨ pic.twitter.com/42tZb150oA
— Red Giant Movies (@RedGiantMovies_) February 20, 2026
ஆக மொத்தத்தில் இது கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமான படமாக தயாராகவுள்ள நிலையில், இடத்ன் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளதாம். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே ஆக்ஷன் மற்றும் அதிரடி வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் 90ஸ் காலகட்டத்தில் நடக்கும், கேங்ஸ்டர் கதையில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இந்த ப்ரோமோவில் யார் யார் இடம் பெறுவார்கள் என எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.