Shalini Ajith: ‘ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள்’ – விஜய் மற்றும் அஜித் குறித்து ஷாலினி பேச்சு!
Shalini About Ajith - Vijay Healthy Bond: தமிழில் 90ஸ், 20ஸ் தொடக்கத்தில் சிறந்த நடிகையாக இருந்துவந்தவர் ஷாலினி அஜித். இவர் அஜித் குமாரின் காதல் மனைவி ஆவார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய இவர், அஜித் குமார் மற்றும் தளபதி விஜய்யின் நட்புறவு குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
நடிகை ஷாலினி அஜித் குமார் (Shalini Ajith Kumar), தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக இருந்துவந்தவர். இவர் தனது சிறுவயதிலே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்ககளில் நடித்துவந்தார். பின் தமிழிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவந்தார். பின் கதாநாயகியாகவும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர், தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த விதத்தில், அஜித் மற்றும் ஷாலினி இருவருமே 1999ம் ஆண்டில் வெளியான “அமர்க்களம்” (Amarkkalam) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதிலிருந்து இவர்களுக்குள் காதல் மலர்ந்த நிலையில், தற்போது திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறது.
அந்த விதத்தில் நடிகை ஷாலினி அஜித் குமார் எப்போதும் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். மேலும் இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய ஷாலினி, அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் இருவருக்கும் இடையேயான நட்புறவு குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளர்.
இதையும் படிங்க: தாய் கிழவி-னு டைட்டில் வைக்க காரணம் இதுதான் – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்!
தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் நட்பு பற்றி ஷாலினி அஜித் குமார் பேச்சு:
சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது பேசிய ஷாலினி அஜித் குமார், “அவர்கள் இருவருக்கும் இடையே மிகவும் ஆரோக்கியமான உறவு இருக்கிறது. இருவருமே ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள். அது மிகவும் அழகானது” என அதில் வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: என் மகன் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்காக எந்த சிபாரிசும் செய்தது இல்லை – சிவகுமார்
அஜித் குமார் மற்றும் விஜய் குறித்து நடிகை ஷாலினி பேசிய வீடியோ பதிவு:
அவர்களுக்கிடையில் மிக ஆரோக்யமான உறவு உண்டு. இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள்அது அழகானது” – ஷாலினி🤍🤍#Shalini | #Ajith | #ThalapathyVijay
pic.twitter.com/s0VsUGyceB— Karthi (@vvskarthii) February 19, 2026
கோலிவுட் சினிமாவில் இருபெரும் தூண்களாக அஜித் குமார் மற்றும் விஜய் இருந்துவருகின்றனர். இவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்ட வரவேற்புகளும் இருக்கும். அந்த விதத்தில் சினிமாவில் இருவருக்கும் இடையே போட்டி இருந்தாலும், அஜித் மற்றும் விஜய் இருவருமே நல்ல நட்புறவில் இருக்கின்றனர். அந்த விதத்தில் அஜித் குமாரும் நேர்காணல் ஒன்றில், விஜய்யின் வெற்றிப்பயணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது நடிகை ஷாலினி, அஜித் மற்றும் விஜய்யின் நட்பு பற்றி தெரிவித்தது தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.



