AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாய் கிழவி-னு டைட்டில் வைக்க காரணம் இதுதான் – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்!

Thaai Kizhavi Movie Title Reason: நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள நிலையில், விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்திற்கு தாய் கிழவி என டைட்டில் வைப்பதற்கான காரணத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கியுள்ளார்.

தாய் கிழவி-னு டைட்டில் வைக்க காரணம் இதுதான் – இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கம்!
தாய் கிழவி படம் பற்றி சிவகுமார் முருகேசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Feb 2026 17:54 PM IST

தமிழில் அறிமுக இயக்குநராக நுழைந்திருப்பவர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan). இவரின் இயக்கத்தில் முதல் திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதுதான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதையே ராதிகா சரத்குமாரை மையமாக கொண்டுதான் தயாராகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இதில் ராதிகா சரத்குமாருடன் நடிகர்கள் பாலா சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா (Nivas K. Prasanna) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து 1 பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது.

அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் சிவகுமார் முருகேசன், இப்படத்திற்கு தாய் கிழவி என டைட்டில் வைப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்துத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்ராந்த் – ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்

தாய் கிழவி டைட்டில் வைப்பதற்கான காரணம் குறித்து சிவகுமார் முருகேசன் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் சிவகுமார் முருகேசன், “தாய் கிழவி-னு பாலை நிலத்தில் கொற்றவை தெய்வத்தை சொல்லுவாங்க. பெண் தெய்வத்தை கிழவி என சொல்லுவாங்க. அதேமாதிரி தாய் கிழவி-னா ஆதி பெண் தெய்வம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பெண் எப்படி ஆதி பெண் தெய்வமாக இருக்காங்களோ, அந்த விஷயத்தை எடுத்துரைக்கவேண்டும் என்பதாலே தாய் கிழவி என்ற டைட்டிலை செலெக்ட் பண்ணோம். இந்த தாய் கிழவி படத்தின் கதை, நிஜ வாழ்க்கையில் எல்லார் வீட்டிலும் உப்பில்லா ஒரு பாட்டியைப் பற்றிய கதைதான். தண்டட்டி கிழவிகள் என்பவர்கள், ஒரு பெண் குழந்தை பிறந்து 3வது நாளிலே அவர்களின் காதை கீறிவிடுவார்கள்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்

அது அவர்கள் வளர்ந்து இளம் வயது அடைந்தவுடன்போது, அவர்களின் காதில் தண்டட்டி அணிவதற்கு சரியாக இருக்கும். அந்த விதத்தில் தற்போது தமிழகத்தில் தண்டட்டி அணியும் பெண்கள் மிகவும் குறைவுதான். இந்த் படத்திற்காக நான் ஆராய்ச்சி செய்ததில் கிட்டத்தட்ட 100 போர் மட்டுமே மீதம் இருக்கிறார்கள். அப்படியொரு இனமே அழிந்துவருகிறது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

தாய் கிழவி படம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் பேசியது தொடர்பான பதிவு :

இந்த தாய் கிழவி படமானது அதிரடி காமெடி மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படம் முதலில் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் படக்குழு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், அதையடுத்து தற்போது 2026 பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றியுள்ளது. இப்படமானது நிச்சயமாக மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.