லோகா சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு!
Actress Kalyani Priyadarshan about Lokha Chapter 2 Movie: மலையாள சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கன படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் பிரியதர்ஷன். இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பான்மையான படங்களை மலையாள சினிமாவில் இயக்கி இருந்தாலும் தமிழ் மற்றும் பான் இந்திய மொழிகளில் இவரது படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் லோகா சாப்டர் 1 சந்திரா மற்றும் ஓடும் குதிரை சாடும் குதிரை என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில் லோகா சாப்டர் 1 சந்திரா படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். சுமார் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 300 கோடிகள் வரை வசூலித்து மாபெரும் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.




லோகா சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது?
முதல் பாகத்தில் கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து மலையாள சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மொத்தம் 5 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது லோகா படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டில் படப்பிடிப்பை தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாகவும் கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… நெகிழ்ந்து பேசிய மமிதா பைஜூ
இணையத்தில் வைரலாகும் கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு:
“#Lokah2 script work is going on✍️. Hopefully shooting will begin from September🎬. Yes, I’m part of the film, so wait for it😀”
– #KalyaniPriyadharshanpic.twitter.com/ovv8jOhuCw— AmuthaBharathi (@CinemaWithAB) February 18, 2026
Also Read… ரஜினிகாந்தின் இறுதிப் படத்தை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்? வைரலாகும் தகவல்