AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆத்தி என்னாலே முடியலயே… இரண்டு வானம் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!

Aathi Ennale Mudiyalaye song out now | நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஆத்தி என்னாலே முடியலயே… இரண்டு வானம் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!
இரண்டு வானம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 18:23 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் நட்டிகராக அறிமுகம் ஆகி தற்போது தனது இடத்தை மிகவும் பலமாக வைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தமிழ் சினிமாவில் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் தமிழ் மொழியில் ஒரே பாணியில் இல்லாமல் வெவ்வேறு பாணியில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இறுதியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிகை மமிதா பைஜூ உடன் இணைந்து நடித்துள்ள இரண்டு வானம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் முன்னதாகவே முடிவடைந்து இருந்தாலும் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இரண்டு வானம் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்:

இந்த நிலையில் தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. அதன்படி இந்த இரண்டு வானம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிளான ஆத்தி என்னாலே முடியலயே பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Dhruv Vikram: துருவ் விக்ரமின் ஜாக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக இணையும் நடிகை யார்?

இரண்டு வானம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… பேக் டூ பேக் டபுள் எவிக்ஷன்.. பிக் பாஸிலிருந்து வெளியேறிய சாதிகா – முகேஷ் – வைரலாகும் ப்ரோமோ!

Follow Us