AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வசூலில் ரூபாய் 100 கோடிகளை கடந்தது தனுஷின் ஓ.எம் படம் – வெளியானது அப்டேட்

O.M Movie 3 Days Box Office Collection Update Here | நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ஓ.எம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்களில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து அப்டேட் வைரலாகி வருகின்றது.

வசூலில் ரூபாய் 100 கோடிகளை கடந்தது தனுஷின் ஓ.எம் படம் – வெளியானது அப்டேட்
ஓ.எம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Nov 2026 15:27 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் தமிழ் மொழியில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஓ.எம் ஆப்பரேசன் மோல். இந்தப் படம் ஸபை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இந்த ஓ.எம் ஆப்பரேசன் மோல் என்ற படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசிருதீன் ஷா, இந்திரன், ரேணு தேசாய், கலைராணி, சிவாஜி ராஜா, சைது ஜொன்னலகத்தா, லல்லு, சஞ்சய் ஸ்வரூப், TSK, மேகா ராமகிருஷ்ணா மற்றும் தீனா என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தை போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒண்டர் பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து படத்தின் வசூல் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

வசூலில் ரூபாய் 100 கோடிகளை கடந்தது தனுஷின் ஓ.எம் படம்:

அதன்படி இந்த ஓ.எம் படம் கடந்த 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்களில் ரூபாய் 101.7 கோடிகள் ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் வசூல் 200 கோடிகளை தாண்டுமா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… இன்றைய தலைமுறையினர் அப்படி இருப்பது வருத்தமளிக்கிறது – இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஓபன் டாக்

ஓ.எம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அன்புக்கு ரொம்ப நன்றி.. சர்ப்ரைஸாக தியேட்டர்களை விசிட் செய்த சாய் பல்லவி!

Follow Us