AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மிஷ்கினுக்கும் எனக்கும் தந்தை – மகள் போன்ற உறவு உள்ளது… நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh talks about Mysskin | தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் சத்யவான் சாவித்திரி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மிஷ்கினுக்கும் எனக்கும் தந்தை – மகள் போன்ற உறவு உள்ளது… நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2026 19:11 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் டோரதி படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) கதையின் நாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் சத்யவான் சாவித்திரி. இந்தப் படத்தினை இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

அதன்படி நடிகர்கள் மிஷ்கின், சாருகேஷ் எம், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், தீபா சங்கர், மதுசூதனன், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதிலளித்த கீர்த்தி சுரேஷ்:

அதன்படி கீர்த்தி சுரேஷ் அளித்தப் பேட்டியில் பேசியதாவது, மிஷ்கினுக்கும் எனக்கும் தந்தை-மகள் போன்ற பிணைப்பு உள்ளது. செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, மிஷ்கின் சார் என் காலின் மீது கை வைத்தபோது நான் அசௌகரியமாக உணர்ந்ததாக ஒருவர் பதிவிட்டதைக் கண்டேன். நான் எப்போதாவது அசௌகரியமாக உணர்ந்ததாகக் கூறினேனா? நான் அவரை என் தந்தையாகப் பார்க்கிறேன், அவரும் என்னை தன் மகளாகவே பார்க்கிறார். உண்மையில், அவர் தன் கையை வைப்பதற்கு முன்பே, நானே அவருடைய கையைப் பிடிக்கத்தான் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜெயித்தாரா துல்கர்? ‘ஆகாசம்லோ ஓகா தாரா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… O.M: விறுவிறுப்பான ஸ்பை திரில்லர்… தனுஷின் ஓ.எம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள்!

Follow Us