அஞ்சாதே பாகம் 2 குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் மிஷ்கின்!
Anjathey 2 Movie Update Here | இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அஞ்சாதே. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக பலப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் மிஷ்கின் (Mysskin). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பலப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிசியாக வலம் வந்த இயக்குநர் மிஷ்கின் கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிப்பதில் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகிறார். மேலும் நடிகர் மிஷ்கின் தமிழ் மொழியில் மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். சிலப் படங்களில் வில்லனாகவும் நெகட்டிவ் கதாப்பாத்திரத்திலும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் மிஷ்கின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக சத்யவான் சாவித்திரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் அவருக்கு எதிர் கதாப்பாத்திரத்தில் நடிகர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்தப் படத்தின் புரமோஷனின் போது அவரது படங்களின் பார்ட் 2 படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.




அஞ்சாதே பாகம் 2 குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குநர் மிஷ்கின்:
அதற்கு பதிலளித்துப் பேசிய மிஷ்கின், அஞ்சாதே 2 படத்தை நரினை வைத்து இயக்குமாறு லோகேஷ் கனகராஜ் என்னிடம் கேட்டுக்கொண்டார். நரினும் என்னிடம் இதைப் பற்றிப் பேசினார். ஆனால், அஞ்சாதே 2 எப்படி உருவாக்குவது என்று எனக்குத் தெரியவில்லை என்பதால், என்னை வற்புறுத்த வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டேன். படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கும்? அவன் இன்னும் தன் மனைவியுடன் இருக்கிறானா அல்லது அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
பழைய விஷயங்களையெல்லாம் மீண்டும் ஒன்றிணைத்து, பிரசன்னாவையும் அழைத்து வந்து, அந்த காட்சிகளை அப்படியே மறுஉருவாக்கம் செய்தால் அது பலனளிக்காது. அதனால், என்னை வற்புறுத்த வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன். அவர் மிகுந்த அன்புடன் என்னிடம் இதைக் கேட்டார்; லோகேஷ் கனகராஜுடன் நான் முன்பே பணியாற்றியுள்ளதால், எங்களுக்கிடையே நல்ல நட்புறவு உள்ளது.
நான் ஒரு இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டுமென்றால், அஞ்சாதே படத்தின் கட்டமைப்புகளை அப்படியே எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றியே கதையை உருவாக்க வேண்டியிருக்கும். அது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். தற்போது நான் முழு சுதந்திரத்துடன் எனது படங்களை இயக்கி வருகிறேன். அதனால்தான், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு படத்தை உருவாக்குகிறேன்.
Also Read… ஓ.எம் பட காலை 6 மணி FDFS.. தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: “Bring back #ChithiramPesuthadi and #Anjathey Part 2. Why are you sitting like this? Your fans like us are dried up”
#Mysskin:
“Fans dried up? Sir, Part 2 and Part 3 are just build-up!
#LokeshKanagaraj approached me to make #Anjathey2 with #Narain. Narain also asked me about it, but I told him not to force me because I genuinely don’t know how to make Anjathey 2. It has been 23 years. What is the character doing now? Is he still with his wife? Have they divorced? I don’t know anything about it.
If I simply put together all the old elements, bring in #Prasanna and recreate those scenes, it won’t work. So I told him not to force me. He approached me with a lot of affection, and I have worked together before with #LokeshKanagaraj so we share a friendly relationship.
If I have to make a sequel, I would have to take all the templates of Anjathey and build the story around them. That’s unwanted pressure. I’m currently making my films with complete freedom. That’s why I make a film once every 2 years.
I will definitely make a film. I want to work with two extraordinary kids, #LokeshKanagaraj and #Narain.” https://t.co/aMuJEPYZMh
— Movies Singapore (@MoviesSingapore) November 18, 2026
Also Read… O.M Movie: தனுஷின் ஓ.எம் திரைப்படம் வெளியாகுவதில் ஏற்பட்ட சிக்கல்.. என்னனு தெரியுமா?