Tamil Nadu Rains: நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?
Rainfall Alert: நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நவம்பர் 20, 2026: சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நவம்பர் 22ஆம் தேதி கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், கடலோரத்தை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 23: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நவம்பர் 23ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒன்றல்ல..இரண்டல்ல.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. விழுப்புரம் தலைமையாசிரியரின் வக்கிர செயல்!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 24: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நவம்பர் 24ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: வீட்டில் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. ரத்த களறியான தூத்துக்குடி.. 5 சிறுவர்களை அலேக்காக தூக்கிய போலீஸ்!
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 25: தேனி, திண்டுக்கல், மதுரையில் கனமழை
நவம்பர் 25ஆம் தேதி தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் நவம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.