AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வீட்டில் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. ரத்த களறியான தூத்துக்குடி.. 5 சிறுவர்களை அலேக்காக தூக்கிய போலீஸ்!

Tuticorin Crime : தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு புகுந்து இருவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிய 5 சிறுவர்களை எட்டயபுரம் போலீசார் அதிரடியாக கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. ரத்த களறியான தூத்துக்குடி.. 5 சிறுவர்களை அலேக்காக தூக்கிய போலீஸ்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Nov 2026 21:54 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக பைக் ஓட்டியதை கண்டித்த இருவரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய 5 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். எட்டயபுரம் வடக்கு ரத வீதியில் வசித்து வருபவர் ராமர் மகன் ஜெயக்குமார் ( 54 வயது). இவர், ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் எட்டயபுரம் தெற்கு ரதவீதியில் வசித்து வரும் கதிரேசன் ( 50 வயது) என்பவர் அந்தப் பகுதியில் மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இருவரும் நேற்று புதன்கிழமை ஜெயக்குமார் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

வீடு புகுந்த இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தன. அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளித்த பின்னர், இருவரும் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடிவந்தனர். அத்துடன், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க: ஒரே மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை.. எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை! 5 பேர் உயிரிழப்பில் சிக்கிய உருக்கமான கடிதம்!

5 சிறுவர்களை அலேக்காக தூக்கிய போலீஸார்

இதில், அந்த கும்பல் எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 16, 17 வயதுடைய 5 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை அலேக்காக காவல் நிலையத்திற்கு தூக்கி வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த அக்டோபர் மாதம் ஜாதி தலைவரின் குருபூஜை நாளில் மூன்று சிறுவர்கள் வடக்கு ரத வீதியில் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதனை, ஜெயக்குமார் கண்டித்த நிலையில், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், ஏற்பட்ட ஆத்திரத்தால் ஜெயக்குமார் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெட்டியதும், அதனை தடுக்க முயன்ற கதிரேசனையும் வெட்டியது தெரியவந்தது.

கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட சிறுவர்கள்

இதனை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து, அவர்களை தூத்துக்குடி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். கைதான ஐந்து சிறுவர்களும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: ஒன்றல்ல..இரண்டல்ல.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. விழுப்புரம் தலைமையாசிரியரின் வக்கிர செயல்!

Follow Us