IPL 2027: தோனிக்கு இனிமேதான் அழுத்தம் அதிகம்.. சேவாக் இப்படி சொல்ல காரணம் என்ன?
MS Dhoni as CSK Mentor: ஐபிஎல் 2027 தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இனி அவர் சிஎஸ்கேவுக்காக விளையாட மாட்டார். இந்த புதிய பொறுப்பு தோனிக்கு ஒரு வீரராக இருந்ததை விட அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்கிறார் வீரேந்தர் சேவாக். ஒரு அணிக்கு வழிகாட்டியாக இருந்து, அதன் வெற்றி தோல்விக்கு தோனி இப்போது பொறுப்பாக இருப்பார் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2027 தொடருக்காக மகேந்திர சிங் தோனி (MS Dhoni) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி இனி சிஎஸ்கே அணிக்காக (Chennai Super Kings) விளையாட மாட்டார் என்று சென்னை அணி நிர்வாகம் கடந்த 2027 நவம்பர் 17ம் தேதி அறிவித்தது. வரவிருக்கும் தொடருக்கு எம்.எஸ்.தோனி சென்னை அணியின் வழிகாட்டியாகப் பணியாற்றுவார். தோனியின் ஐபிஎல் ஓய்வு மற்றும் வழிகாட்டுதல் குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தற்போது, தோனியின் சக வீரரும் முன்னாள் இந்திய வீரருமான விரேந்தர் சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ALSO READ: தோனியின் அதிரடி பேட்டிங்கை சிலாகித்த சச்சின்.. வைரலாகும் போஸ்ட்!




அதில், தோனி ஒரு வீரராக இருப்பதை விட ஒரு வழிகாட்டியாக இருக்கவே அதிக அழுத்தத்தில் இருப்பார் என்றும், அணியைக் கட்டமைத்து, அதன் வெற்றி தோல்விகளை உறுதி செய்ய வேண்டிய அழுத்தத்தில் தோனி இப்போது இருப்பார் என்றும் கூறினார். இதுமட்டுமின்றி, ஒருவேளை அவர் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கலாம் என்றார்.
ஒரு வழிகாட்டியாக தோனிக்கு ஏன் அதிக அழுத்தம் இருக்கும்?
#WATCH | Mumbai, Maharashtra: Former Indian Cricketer Virender Sehwag says, “… Dhoni has been mentoring Chennai since day one, acting as captain, building the team and leading it on the field. Taking on the official role of mentor may bring a different kind of pressure. Every player’s time eventually comes, and perhaps this was the right time for Dhoni to step away from playing cricket, which is why he announced his retirement.”
— ANI (@ANI) November 19, 2026
தோனியின் ஓய்வு குறித்து ஊடகங்களிடம் பேசிய சேவாக், ”எம்.எஸ்.தோனி சென்னை அணியில் சேர்ந்த நாள் முதலே ஒரு வழிகாட்டியாக இருந்து வருகிறார். தோனி கேப்டனாக இருந்தார், அணியை உருவாக்கினார், களத்தில் ஆட்டத்தை வழிநடத்தினார். இது ஒன்றும் புதிதல்ல. தோனி வழிகாட்டியாகப் பொறுப்பேற்கும்போது, அவர் அழுத்தத்தைப் புரிந்துகொள்வார். தோனி விளையாடும்போது அழுத்தத்தை உணர்வதில்லை. அவர் அணியை உருவாக்குவார், அணி வென்றாலும் தோற்றாலும் சிறிதளவு அழுத்தம் இருக்கத்தான் செய்யும்
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு காலம் உண்டு. ஒருவேளை இது தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நேரமாக இருந்திருக்கலாம், அதனால் தோனி ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்” என்றார்.
ALSO READ: கேகேஆருக்கு கேப்டன் யார்..? ரிங்கு சிங் தலைமை பொறுப்பு ஏற்பாரா?
எம்.எஸ். தோனியின் ஐபிஎல் வாழ்க்கை
ஐபிஎல் வாழ்க்கை எம்.எஸ்.தோனி 278 போட்டிகளில் 242 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, அவர் 38.30 சராசரி மற்றும் 137.45 ஸ்டிரைக் ரேட்டுடன் 5439 ரன்கள் எடுத்தார். இந்தக் காலகட்டத்தில், தோனி 24 அரை சதங்களை அடித்தார், இதில் 84 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஐபிஎல்லில் 100 முறை ஆட்டமிழக்காமல் இருந்து, ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.