AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rising Stars Asia Cup 2026: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இன்று முதல் தொடக்கம்.. இந்திய அணியின் போட்டி எப்போது?

India A in Rising Stars Asia Cup 2026: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026 நவம்பர் 19 அன்று தொடங்குகிறது. இந்தியா 'ஏ' அணியை திலக் வர்மா வழிநடத்துகிறார். பாகிஸ்தானுடன் நவம்பர் 22 அன்று மோதல். போட்டி வடிவம், அட்டவணை, இந்தியா 'ஏ' அணி வீரர்கள் பட்டியல் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் செயலி மூலம் நேரடி ஒளிபரப்பு விவரங்கள் இங்கே தெரிந்து கொள்வோம்.

Rising Stars Asia Cup 2026: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இன்று முதல் தொடக்கம்.. இந்திய அணியின் போட்டி எப்போது?
இந்திய ஏ அணி அட்டவணைImage Source: GETTY
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2026 16:55 PM IST

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026 (Rising Stars Asia Cup 2026) இன்று அதாவது 2026 நவம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி ஹாங்காங் ‘ஏ’ மற்றும் வங்கதேச ‘ஏ’ அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இது 50 ஓவர் வடிவத்தில் நடைபெறும் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் (IND A vs PAK A) ஒரே குழுவில் இருப்பதால், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. திலக் வர்மா இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்துகிறார், மேலும் அந்த அணியில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், இந்திய அணி, போட்டி அட்டவணை, நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐசிசி ஒருநாள் தரவரிசை.. இறக்கத்தை கண்ட ரோஹித் சர்மா..!

போட்டி வடிவத்தைப் பொறுத்தவரை, ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026-ல் பங்கேற்கும் 8 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது குழுவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், மற்ற 2 அணிகள் வெளியேற்றப்படும். அரையிறுதிப் போட்டியில், ‘ஏ’ குழுவில் முதலிடம் பெறும் அணி, ‘பி’ குழுவில் இரண்டாமிடம் பெறும் அணியுடன் மோதும்.

இந்தியா ‘ஏ’ அட்டவணை

  • 2026 நவம்பர் 20: இந்தியா ‘ஏ’ vs நேபாளம் ‘ஏ’ (தோஹா)
  • 2026 நவம்பர் 22: இந்தியா ‘ஏ’ vs பாகிஸ்தான் ‘ஏ’ (தோஹா)
  • 2026 நவம்பர் 24: இந்தியா ‘ஏ’ vs ஐக்கிய அரபு அமீரகம் ‘ஏ’ (தோஹா)

இந்தியா ‘ஏ’ அணியின் 3 போட்டிகளிலும், தோஹாவில் நடைபெறும் ஆட்டம் பிற்பகல் 1:00 மணிக்குத் தொடங்கும். இது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியாகும். டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறும்.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026ல் அனைத்து லீக் ஸ்டேஜ் போட்டிகளும் வருகின்ற 2026 நவம்பர் 24ம் தேதி முடிவடையும். அதன் பிறகு அரையிறுதிப் போட்டிகள் தீர்மானிக்கப்படும். முதல் அரையிறுதிப் போட்டி 2026 நவம்பர் 26ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026  நவம்பர் 27ம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி 2026 நவம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா ஏ அணி

திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, குமார் குஷாக்ரா, பிரப்சிம்ரன் சிங், ரிங்கு சிங், ஆயுஷ் படோனி, ஹர்ஷ் துபே, ஷாபாஸ் அகமது, தனுஷ் கோட்டியன், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷத் கான், விப்ராஜ் நிகம், பிரின்ஸ் யாதவ்.

ALSO READ: நியூசிலாந்து தொடரில் சொதப்பல்.. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் இடம் கேள்வி!

இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு எங்கு நடைபெறுகிறது?

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை 2026, இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. சோனி லிவ் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு கிடைக்கிறது.

Follow Us