IPL 2027: தோனியின் அதிரடி பேட்டிங்கை சிலாகித்த சச்சின்.. வைரலாகும் போஸ்ட்!
MS Dhoni IPL Retirement: எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். தோனியின் அதிரடி பேட்டிங் திறனை வங்கதேசத்தில் தான் கண்டதை சச்சின் நினைவு கூர்ந்தார். இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய சச்சின், அவருடன் பயணித்தது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.
எம்.எஸ். தோனியின் (MS Dhoni) ஐபிஎல் ஓய்வு, கிரிக்கெட் உலகின் பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பல பாகிஸ்தான் வீரர்கள் தோனிக்கு அவரது ஓய்வுக்காக வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, முன்னாள் இந்திய பேட்டிங் ஜாம்பவானும், ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், தோனியின் அதிரடி பேட்டிங் குறித்துப் பேசியுள்ளார்.
நேற்று அதாவது 2026 நவம்பர் 17ம் தேதி எம்.எஸ்.தோனி இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் வரவிருக்கும் ஐபிஎல் 2027 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழிகாட்டியாகப் பணியாற்றுவார். தோனியை மீண்டும் களத்தில் காணவே முடியாது என்பதை அறிந்த ரசிகர்களுக்கு, இது உண்மையிலேயே மிகவும் வருத்தமான செய்தியாக இருந்தது.




ALSO READ: அணிக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை.. தோனி ஓய்வுக்கு விளக்கமளித்த சுரேஷ் ரெய்னா!
தோனியைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் என்ன கூறினார்?
I still remember watching MS bat in Bangladesh and telling Sourav that there was something special about his power hitting. You could see he had a rare gift, and what a journey he went on to have.
It was a real joy sharing the dressing room with you and being part of some of our most memorable moments in Indian cricket. I always believed you would do something special, and you went on to achieve so much more.
You’ve given Indian cricket your very best, and it’s been wonderful to have shared this journey with you. Well played, MS!
— Sachin Tendulkar (@sachin_rt) November 18, 2026
தோனியின் ஓய்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் எழுதியதாவது, “வங்கதேசத்தில் எம்.எஸ். தோனி பேட் செய்வதைப் பார்த்தபோது, அவருடைய பவர் ஹிட்டிங்கில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்று நான் சௌரவ் கங்குலியிடம் சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் ஒரு அற்புதமான திறமையாளர் என்பது தெளிவாகத் தெரிந்தது, மேலும் அவர் மேற்கொண்ட பயணம் எவ்வளவு அற்புதமானது!
ALSO READ: இது தோனிக்காக.. ட்ரோன் ஷோ நடத்தி அன்பை பொழிந்த சிஎஸ்கே.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
உங்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமில் பகிர்ந்துகொண்டதும், இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத தருணங்களில் ஒரு அங்கமாக இருந்ததும் உண்மையிலேயே மகிழ்ச்சி அளித்தது. நீங்கள் ஏதேனும் ஒரு சிறப்பான காரியத்தைச் செய்வீர்கள் என்று நான் எப்போதும் நம்பினேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக நீங்கள் சாதித்துள்ளீர்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு உங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள், உங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டது அற்புதமாக இருந்தது. சிறப்பாக விளையாடினீர்கள், எம்.எஸ். தோனி!” என பதிவிட்டிருந்தார்.