AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Rains: சென்னைக்கு நோ மழை.. தென் மாவட்டங்களில் மட்டுமே மழை இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். இருப்பினும், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rains: சென்னைக்கு நோ மழை.. தென் மாவட்டங்களில் மட்டுமே மழை இருக்கும் – வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2026 06:25 AM IST

நவம்பர் 18, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நவம்பர் 20ஆம் தேதி வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் நர்சாப்பூர் – பூரி இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிவிஸ்ட் அடித்த அக்வான் புயல்

முதலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இடையே புயல் கரையைக் கடக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது புயல் ஒடிசா நோக்கி நகர்வதால் தமிழகத்தில் இதன் காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19, 20, 21 – மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

நவம்பர் 19ஆம் தேதியான இன்று தென்தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

மேலும் படிக்க: சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.270 வரை விற்பனை! காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

நவம்பர் 20ஆம் தேதியும் இதே நிலை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் வடகடலோர தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 23-ல் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

நவம்பர் 23ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் உறுதியான தகவல்

அதே நாளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். இருப்பினும், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us