AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் உறுதியான தகவல்

மூன்று வயது குழந்தை தேவதர்ஷினியின் உடலில் பாம்பு கடித்ததற்கான வெளிப்படையான தடயங்கள் இல்லாததால், அவரது உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், தேவதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை தேவ ஜனனி ஆகிய இருவரும் பாம்பு கடித்ததாலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த 2 பெண் குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் உறுதியான தகவல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Nov 2026 21:48 PM IST

நவம்பர் 18, 2026: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் மர்மமான முறையில் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் இரு குழந்தைகளும் பாம்பு கடித்ததால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த தாய், குழந்தைகளை கடித்த பாம்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தில் ஏரிக்கரை ஓரமாக வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா. இந்தத் தம்பதிக்கு தேவதர்ஷினி (3), தேவஜனனி (1) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு புஷ்பா தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த மூவரையும் கடித்ததாகக் கூறப்படுகிறது. பாம்பு கடித்ததை உணர்ந்த புஷ்பா அலறியுள்ளார்.

மருத்துவமனையில் 2 குழந்தைகளும் உயிரிழப்பு

புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.270 வரை விற்பனை! காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இருப்பினும், விஷம் உடலில் பரவியதால் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் புஷ்பாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்

இந்தச் சம்பவத்தில் மூன்று வயது குழந்தை தேவதர்ஷினியின் உடலில் பாம்பு கடித்ததற்கான வெளிப்படையான தடயங்கள் இல்லாததால், அவரது உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இரண்டு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க: தமிழகத்தில் காவல் மரணங்கள் தடுக்கப்படும்; தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி!

தற்போது வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், தேவதர்ஷினி மற்றும் ஒரு வயது குழந்தை தேவ ஜனனி ஆகிய இருவரும் பாம்பு கடித்ததாலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் குறித்த சந்தேகம் தெளிவடைந்துள்ளது.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் மூக்கனூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us