AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் காவல் மரணங்கள் தடுக்கப்படும்; தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி!

DGP Maheshkumar Agarwal: கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். ரவுடிகளுக்கு இடையிலான மோதல்களால் நிகழும் கொலைகள் மொத்த கொலைச் சம்பவங்களில் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் காவல் மரணங்கள் தடுக்கப்படும்; தவறு செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Nov 2026 19:35 PM IST

நவம்பர் 18, 2026: தமிழகத்தில் காவல் மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதே காவல்துறையின் நோக்கம் என்றும், காவல் நிலையங்களில் தவறு செய்யும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, மதுரை காவல் நிலையங்களில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள், காவலர்களுக்கான வார விடுப்பு மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்தார்.

தூத்துக்குடி, மதுரை சம்பவங்கள் – சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி மற்றும் மதுரை காவல் நிலையங்களில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இருப்பதாக டிஜிபி தெரிவித்தார். இந்தச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையில் காவல்துறையினர் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் படிக்க: தூத்துக்குடியில் கூகுள் பே வால் ஏற்பட்ட தகராறு.. விலக்கி விட சென்ற பால் பண்ணை உரிமையாள் கொலை.. ஒருவர் கைது!

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் நடமாட்டமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். காவல் நிலையங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் கண்காணிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

34,000 காவலர்கள், 1,200 உதவி ஆய்வாளர்கள் நியமனம்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிபி கூறினார். அதன்படி, 1,200 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 34,000 காவலர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு: தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க நடவடிக்கை

காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்குவதற்கு போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருக்க வேண்டியது அவசியம் என டிஜிபி விளக்கமளித்தார். முக்கியமான பாதுகாப்புப் பணிகள் இல்லாத நாட்களில் காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பிறகு வார விடுப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக டிஜிபி தெரிவித்தார். ரவுடிகளுக்கு இடையிலான மோதல்களால் நிகழும் கொலைகள் மொத்த கொலைச் சம்பவங்களில் சுமார் ஒரு சதவீதம் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும் இந்த ஆண்டு கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

செஞ்சி சிறுமி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

செஞ்சி சிறுமி தொடர்பான வழக்கில் ஆரம்பகட்ட விசாரணையை உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்டதாக டிஜிபி கூறினார். கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்பு விசாரணை தேவைப்பட்டதால், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

Follow Us