ரத்தமும் சதையும் தெறிக்க தெறிக்க… ஓடிடியில் வெளியாகி உள்ள கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
AKKA web series ott review here | இந்தி சினிமாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியகா நடித்து உருவாகி உள்ள இணையதள தொடர் அக்கா. இந்த தொடர்ன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் அது எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் முதலில் நாயகியாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து நாயகன்களை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் நடிகையர் திலகம் படத்தில் கதையின் நாயகியாக நடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றப் பிறகு தொடர்ந்து படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இவர் கதையின் நாயகியாக நடித்து தென்னிந்திய மொழிகளில் வரிசையாக வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காகிதம் போன்ற ஒரு ஆக்ஷன் படத்தினை போல தற்போது இந்தி மொழியில் உருவான ஒரு இணையதள தொடர் தான் அக்கா.
தாய்வழி சமூகத்தினைப் போல பெண்களால் ஆட்சி அமைக்கப்பட்டு அவர்களால் வழிநடத்தப்படும் ஒரு அரசக் குடும்ப கதையைதான் இந்த இணையதள தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் தற்போது நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிகர்கள் ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி, பி. ஜெயஸ்ரீ, நிவேதிதா பார்கவா, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அன்ஷுமான் புஷ்கர், மோனிகா பன்வார், பூர்ணிமா இந்திரஜித் மற்றும் விஷக் நாயர் உட்பட நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர்.
அக்கா இணையதள தொடரின் கதை என்ன?
இந்த கதை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் போருக்காக சென்ற ஒரு சமூக ஆண்கள் மீண்டும் திரும்பி வராத காரணத்தால் அந்த குலத்தின் பெண்களே அவர்களின் மக்களை ஆட்சி செய்ய தயாராகின்றனர். அதனைத் தொடந்து அங்கு உள்ள பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் சுதந்தித்திற்கு பிறகும் அவர்கள் அரசிற்கு கீழ் செல்ல மறுத்து தனியாக ஆட்சி செய்து வருகின்றனர்.




Also Read… ஆக்ஷனுக்கு ரெடியா… சூர்யாவின் 49-வது படத்தின் இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
இவர்களில் எந்த பெண் ஆட்சி செய்கிறாரோ அவர் எந்த வயதில் இருந்தாலும் அக்கா என்றே அழைப்பார்கள். அப்படிப்பட்ட பொருப்பிற்கு ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் வருகிறார். அவர் அந்த மக்களை பாதுகாக்கும் போது வில்லியாக உள்ள ராதிகா ஆப்தே அந்த ஊரில் இருக்கும் ஆண்களை கைக்குள் போட்டு அந்த பதவியை பறிக்க நினைக்கிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இந்த தொடரின் கதை.
முழுக்க முழுக்க ரத்தமும் சதையும் தெறிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த இணையதள தொடர் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… நடிகர் சூரியின் 7-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ