AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு வியூகமா..? நியூசிலாந்து கேப்டன் சூப்பர் பிளான்!

Tom Latham Playing XI Plan: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம், தங்கள் அணியின் பிளேயிங் XI குறித்த முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். வெலிங்டனில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டருடன் களமிறங்குவதாக லாதம் அறிவித்தார். காயத்திலிருந்து மேட் ஹென்றி குணமடைந்ததால், அவர் டெஸ்ட் அணிக்குத் திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

IND vs NZ: இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு வியூகமா..? நியூசிலாந்து கேப்டன் சூப்பர் பிளான்!
நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2026 18:36 PM IST

இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது அணியின் அணி அமைப்பு குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். வெலிங்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி (IND vs NZ) 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்-ரவுண்டருடன் களமிறங்கும் என்று டாம் லாதம் தெளிவுபடுத்தினார். பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பெரும் பலம் கிடைக்கும். ஏனெனில,  இந்திய அணியும் 4 வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கும்.

ALSO READ: வெலிங்டன் பேசின் ரிசர்வ் பிட்ச் யாருக்கு சாதகம்..? பேட்ஸ்மேன்கள் திணறுவார்களா?

இந்திய அணிக்கு எதிராக களமிறக்கும் பிளேயிங் லெவன் குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், “நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டருடன் விளையாடுவோம். கைல் ஜேமிசன் மற்றும் மாட் ஹென்றி ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் குறித்து தெளிவு இல்லை. வெலிங்டன் டெஸ்டுக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மாட் ஹென்றி குணமடைந்துள்ளார்.

மாட் ஹென்றி உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்ப ஆர்வமாக இருப்பார் என்று நம்புகிறேன், கைல் ஜேமிசன் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். கடந்த சில வாரங்களாக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்” என்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை குறித்து டாம் லாதம் கூறுகையில், “எனது கவனம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இல்லை. எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் கவனம் செலுத்துவோம். எங்கள் ஆட்ட பாணியில் எந்த மாற்றமும் ஏற்படாது” என்றார்.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் உள்ளன.

இந்திய டெஸ்ட் அணி

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், அன்ஷுல் கம்போஜ், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, குர்னூர் பிரார், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

ALSO READ: 58 ஆண்டுகள் வெற்றிக்காக காத்திருக்கும் இந்தியா..? தோல்விக்கு முற்றுப்புள்ளி..?

நியூசிலாந்து டெஸ்ட் அணி

டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, வில் யங், டாம் பிளண்டல் (விக்கெட் கீப்பர்), கைல் ஜேமிசன், கிளென் பிலிப்ஸ், பிளேயர் டிக்னர், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், சச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித்.

Follow Us