Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
World Test championship 2025

World Test championship 2025

இன்றைய நவீன கிரிக்கெட்டில் என்னதான் ஒருநாள், டி20 மற்றும் டி10 என பல வடிவங்கள் வந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் பல மக்களால் விரும்பப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டின் அஸ்திவாரம் என்றே டெஸ்ட் கிரிக்கெட்டை அழைக்கலாம். 5 நாள் நடைபெறும் இந்த போட்டி, பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர் என அனைவரையும் உடல் மற்றும் மனதளவில் சோதிப்பதால்தான், அதற்கு டெஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 90 காலக்கட்டத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் 5 நாள் வரை நீடிக்கும். ஆனால், இன்றைய காலத்தில் டெஸ்ட் போட்டிகள் 4 நாள் சென்றாலே, அதியசயமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு டெஸ்ட் வடிவம் மாறிவிட்டது என்றே கூறலாம். இதன்காரணமாக, ஐசிசி அடுத்த 2 ஆண்டுகளில் 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. இந்த மாற்றத்தினால், சிறு நாடுகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மட்டுமின்றி, பொருளாதர பிரச்சனையையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என ஐசிசி நினைக்கிறது.

 

Read More

WTC 2027-29: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இனி 12 அணிகள்.. சுவாரஸ்யத்தை தூண்டும் ஐசிசி.. சிறிய அணிகளுக்கு வாய்ப்பு!

ICC World Test Championship 2027-29: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தற்போது விளையாடும் 9 அணிகள் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகும் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடங்கியது.

WTC Points Table: 4 வெற்றிகளுடன் 3வது இடத்தில் இந்தியா.. ஒரு வெற்றியுடன் இலங்கை 2வது இடம்! காரணம் என்ன?

World Test Championship 2025-2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கை 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்று ஒன்றை டிரா செய்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை 2வது இடத்தில் உள்ளது.

IND vs WI Test: வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்.. கேப்டனாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கில்!

IND beat WI in second Test: முதல் இன்னிங்சில் 175 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் இடையே 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. போட்டியின் இறுதி நாளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஸ்டன் சேஸிடம் கேட்ச் கொடுத்து சாய் சுதர்ஷன் வெளியேறினார்.

IND vs WI 2nd Test Day 4 Highlights: வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீண்! வெற்றி விளிம்பில் இந்திய அணி.. கலக்கிய பும்ரா!

IND vs WI 2nd Test Score: நான்காம் நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 13ம் தேதி ஆட்டம் முடியும் வரை கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றிபெற இந்திய அணிக்கு இன்னும் 58 ரன்களே தேவையாக உள்ளது.

Shubman Gill Records: 10வது சதத்துடன் பல்வேறு சாதனைகள்.. இந்திய அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில்!

IND vs WI 2nd test Day 2: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

IND vs WI 2nd Test: முதல் நாளில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம்.. 150 ரன்களை கடந்து களத்தில் ஜெய்ஸ்வால்!

IND vs WI 2nd Test Day 1 Highlights: யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 48வது டெஸ்ட் இன்னிங்ஸில் 5வது முறையாக 150 ரன்களைக் கடந்துள்ளார். நாளைய அதாவது 2025 அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது நாளில் இரட்டை சதம் அடிக்க முடிந்தால், அது அவரது ரெட்-பால் வாழ்க்கையில் மூன்றாவது இரட்டை சதமாக அமையும்.

Yashasvi Jaiswal Century: குறைந்த வயதில் 7வது சதம்.. அதிவேக 3000 ரன்கள்! வெஸ்ட் இண்டீஸ் எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்!

India vs West Indies, 2nd Test: சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3,000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். அவர் தனது 71வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். ஜெய்ஸ்வால் ஒரு ஒருநாள் போட்டியில் 15 ரன்களும், 23 டி20 போட்டிகளில் 22 இன்னிங்ஸ்களில் 723 ரன்களும் எடுத்துள்ளார்.

IND vs WI 2nd Test: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட்! இன்று தொடங்கும் போட்டியை எப்போது, ​​எங்கே காணலாம்?

IND vs WI 2nd Test Live Streaming: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 போட்டிகளிலும்,  இந்திய அணி 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

IND vs WI 1st Test: வரலாற்றில் இது 4வது முறை மட்டுமே! 18 வருட வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அணி!

Indian Cricket Team Records: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் ஆண்டில் ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்தது இது நான்காவது முறையாகும். இப்படியான முதல் வரலாறு கடந்த 1979ம் ஆண்டு நடந்தது. இதைத் தொடர்ந்து 1986 மற்றும் 2007 இல் நடந்தது.

IND vs WI 1st Test: ஒரே நாளில் கே.எல்.ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம்!

IND vs WI 1st Test Day 2 Highlights: இந்திய அணி 218 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது விக்கெட்டான கே.எல். ராகுலை இழந்தது. பின்னர் துருவ் ஜூரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்பேற்று ரன் குவிக்க தொடங்கினார். இந்த ஜோடி 206 ரன்கள் எடுத்த மிகப்பெரிய கூட்டணியைப் பகிர்ந்து கொண்டனர்.

IND vs WI 1st Test: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டை எப்போது, ​​எங்கே பார்க்கலாம்? முழு விவரம் இதோ!

IND vs WI 1st Test Live Streaming: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 2025 அக்டோபர் 2ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு இது ஒரு முக்கியமான போட்டியாக இருக்கும்.

India vs West Indies: இந்திய மண்ணில் நாளை முதல்.. வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட்! இந்திய பிளேயிங் லெவன் எப்படி?

IND vs WI 1st Test Pitch Report: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள சிவப்பு களிமண் மைதானத்தில் நடைபெறும். இந்த மைதானம் அதிக புல்வெளிகளைக் கொண்டது என்றாலும், போட்டிக்கு முன்பு இது மேலும் வெட்டப்படும்.

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

India Squad for West Indies Test: பிசிசிஐ, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

India vs West Indies Test: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. இந்திய அணி எப்போது அறிவிக்க வாய்ப்பு?

India vs West Indies Test Series: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த கருண் நாயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் ரிஷப் பண்ட் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை.

Mohammed Siraj’s England Heroics: ஐசிசி நடுவரையும் ரசிகராக்கிய முகமது சிராஜ்.. சோசியல் மீடியாவில் பாராட்டிய குமார் தர்மசேனா..!

Siraj's Stunning England Tour: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜின் அபார பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது. 23 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகனாகவும், ஐசிசி தரவரிசையில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி நடுவர் குமார் தர்மசேனா கூட சிராஜின் பந்துவீச்சை பாராட்டியுள்ளார்.