Gautam Gambhir: தென்னாப்பிரிக்கா தொடர் இழப்பு.. பிரஸ் மீட்டில் கவுதம் கம்பீர் காட்டம்!
Gautam Gambhir Press Conference: இந்தியாவில் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தோல்வி கம்பீரின் பயிற்சி குறித்தும் கேள்விகளை எழுப்பியது. கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்தியா எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) மற்றொரு டெஸ்ட் தொடரை இழந்தது. இந்தியாவில் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தோல்வி கம்பீரின் பயிற்சி குறித்தும் கேள்விகளை எழுப்பியது. கவுதம் கம்பீரின் (Gautam Gambhir) பயிற்சியின் கீழ் இந்தியா எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் எத்தனை போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது, எத்தனை போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். அதேநேரத்தில், தோல்விக்கு பிறகு இன்று அதாவது 2025 நவம்பர் 25ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளருக்கு நீங்கள் சரியான நபரா என்று கம்பீரிடம் கேட்கப்பட்டது.
ALSO READ: 25 ஆண்டுகளுக்கு பிறகு! டெஸ்ட் தொடரை வென்ற SA.. இந்தியா மோசமான சாதனை படைப்பு!




எனது எதிர்காலம்..!
See how shamelessly Gautam Gambhir said “I’m same guy who got results in England, won the Champions Trophy and Asia Cup”. 😭🙏 pic.twitter.com/Tu5BCctcZj
— ` (@arrestshubman) November 26, 2025
இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், “எனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்யும். ஆனால், யாருடைய தலைமையின் கீழ் இந்தியா இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட்டதோ, சாம்பியன்ஸ் டிராபியை வென்றதோ, ஆசியக் கோப்பையை வென்றதோ அதே நபர் நான்தான். எந்த ஒரு வீரரையோ அல்லது ஒரு ஷாட்டையோ குறை கூறுவது நியாயமில்லை. என்னில் தொடங்கி இந்த தோல்விக்கு எல்லோரும் பொறுப்பு. தோல்விக்குப் பிறகு நான் எந்த வீரரையும் குறை சொன்னதில்லை, எதிர்காலத்திலும் அப்படிச் செய்ய மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மிகவும் ஆடம்பரமான மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்கள் தேவையில்லை. குறைந்த திறன்களும் வலுவான மனநிலையும் கொண்ட வீரர்கள் நமக்குத் தேவை. அவர்கள் நல்ல டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக உருவாகுவார்கள்” என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் சாதனை:
இந்திய கிரிக்கெட் அணி கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் மொத்தம் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
- மொத்த போட்டிகள் – 19
- வெற்றி- 7
- தோல்வி – 10
- டிரா – 2
- வெற்றி சதவீதம் – 36.84
ALSO READ: WTC புள்ளிகள் பட்டியலில் சரிந்த இந்தியா.. பாகிஸ்தான் முன்னிலை.. யார் முதலிடம்?
3 டெஸ்ட் தொடர் தோல்வி:
கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் 6வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
- மொத்த தொடர்கள் – 6
- தொடர் வெற்றி – 2
- தொடரை இழந்தது – 3
- தொடர் டிரா – 1
கவுதம் கம்பீரின் பயிற்சியின்கீழ், இந்தியா 18 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில் கடந்த 2024ம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான தோல்வியும், தற்போது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வியும் அடங்கும். குவஹாத்தியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.