T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் அவுட்.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதித்த பிசிபி!
PCB Punishes Pakistan Players: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட ரன்களுக்குள் வெற்றியை பெற வேண்டும் என்ற சமன்பாட்டை பாகிஸ்தான் அணி (Pakistan Cricket Team) பெற்றிருந்தது. இதை செய்ய தவறியதால், பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026ல் (2026 T20 World Cup) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கோபத்தை தூண்டியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் செயல்திறன் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான நடவடிக்கையை எடுத்து, ஒவ்வொரு வீரருக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட ரன்களுக்குள் வெற்றியை பெற வேண்டும் என்ற சமன்பாட்டை பாகிஸ்தான் அணி (Pakistan Cricket Team) பெற்றிருந்தது. இதை செய்ய தவறியதால், பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
ALSO READ: டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டிகள் எப்போது தொடக்கம்? இந்திய அணியின் போட்டி விவரம் இதோ!




பிசிபி அதிரடி நடவடிக்கை:
கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதியது. இந்த போட்டியின்போது நியூசிலாந்தில் நிகர ரன் ரேட்டை விட பாகிஸ்தான் தனது நிகர ரன் ரேட்டை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதன் காரணமாக, இலங்கைக்கு எதிராக 65 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும், ரன் ரேட் இல்லாத காரணத்தினால் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்:
🚨 𝑹𝑬𝑷𝑶𝑹𝑻𝑺 🚨
The Pakistan Cricket Board (PCB) has reportedly fined the national team cricketers PKR 5 million (Rs 16.28 lakh) each after they failed to qualify for the T20 World Cup 2026 semi-finals. 🇵🇰🤯
(Source: Express Tribune)#Pakistan #T20WorldCup #SalmanAliAgha… pic.twitter.com/rlGYcNYgpW
— Sportskeeda (@Sportskeeda) March 2, 2026
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் கூற்றுப்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் மோசமான செயல்பாட்டிற்காக பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிபி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் அணி வெளியேறியது எப்படி..?
2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, நமீபியா, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும், நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மிகக் குறுகிய வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தது. அதேநேரத்தில், இந்தியா, இங்கிலாந்து போன்ற முக்கிய அணிகளிடம் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்தது.