AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs WI: ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. உலக சாதனை படைத்த ஹெட்மையர்!

Shimron Hetmyer Record: வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மையர் 2026 டி20 உலகக் கோப்பையில் சிக்ஸர்கள் அடித்து உலக சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில், ஒரு டி20 உலகக் கோப்பை பதிப்பில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம், சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் நிக்கோலஸ் பூரனின் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தைப் பிடித்தார்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Mar 2026 22:54 PM IST
2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், பேட்டிங் செய்த ஷிம்ரன் ஹெட்மையர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பெரியளவில் ரன் சேர்க்கவில்லை என்றாலும், 2 சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம், ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.

1 / 5
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ரோஸ்டன் சேஸ் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் அரைசத பார்ட்னர்ஷிப் பகிர்ந்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு களமிறங்கிய ஹெட்மையர், அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.

2 / 5
ஹார்டிக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் ஹெட்மையர் ஒரு சிக்ஸர் அடித்தார். அதனை தொடர்ந்து, வருண் சக்ரவர்த்தி பந்தில் மற்றொரு பெரிய சிக்ஸரை அடித்தார். இந்த இரண்டாவது சிக்ஸருடன், ஹெட்மையர் டி20 உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் ஆனார். ஹெட்மியர் தற்போது இந்த 2026 உலகக் கோப்பையில் ஏழு இன்னிங்ஸ்களில் 19 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

3 / 5
இதன் மூலம், ஹெட்மையர் பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சாதனையை முறியடித்தார். 18 சிக்ஸர்கள் அடித்த ஃபர்ஹான் இதுவரை முதலிடத்தில் இருந்தார். இப்போது ஹெட்மையர் முதல் இடத்தை அடைந்துள்ளார். 2024 உலகக் கோப்பையில் 17 சிக்ஸர்கள் அடித்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் நிக்கோலஸ் பூரனின் சாதனையையும் ஹெட்மையர் முறியடித்துள்ளார்.

4 / 5
இருப்பினும், இந்த போட்டியில் ஹெட்மையர் வெறும் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 27 ரன்கள் எடுத்து ஜஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பும்ரா தான் விளையாடிய எட்டு டி20 போட்டிகளில் 5வது முறையாக ஹெட்மையரை அவுட்டாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us