AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி.. எப்போது அமலுக்கு வரும்?

EPFO to Introduce UPI and ATM Facility | பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் இணையதளம் மூலம் விண்ணப்பித்து தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை சுலபமாக எடுக்க உதவும் யுபிஐ மற்றும் ஏடிஎம் வசதி எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து பார்க்கலாம்.

Viral Video : பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி.. எப்போது அமலுக்கு வரும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Nov 2026 23:59 PM IST

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான சிறப்பு திட்டமாக உள்ளதுதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த தொகையை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி

இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதுவரை ஊழியர்கள் இபிஎஃப்ஓ இணையதளம் மூலம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான், பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இபிஎஃப்ஓ திட்டமிட்டு வருகிறது. இந்த முறைகள் எப்போது முதல் அமலுக்கு வரும் என ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஆன்லைன் மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் போதும்!

இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அமலுக்கு வரும்

ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் பிஎஃப் பணத்தை எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு விண்ணப்பித்து கைக்கு பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளது. இந்த நிலையில் தான், ஊழியர்கள் மிக எளிதாக தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதன் பிறகு இணையதளம் மேம்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான், இந்த புதிய அம்சம் எப்போது அமலுக்கு வரும் என ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : ரூ.52 லட்சம் சம்பள வேலையை விட்டுவிட்டு மோமோஸ் தொழில் தொடங்கிய நபர்.. தற்போது ஆண்டுக்கு ரூ.5 கோடி!

யுபிஐ, ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம்?

இந்த இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தின் மூலம் ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை ஏடிஎம் (ATM – Automated Teller Machine) அல்லது யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அம்சங்கள் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அம்சம் இன்னும் அறிமுகம் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில், விரைவில் இன்னும் ஒருசில நாட்களில் இந்த அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow Us