AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆன்லைன் மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் போதும்!

Excerpt - How To Check Balance In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், ஊழியர்களின் பெயர்களின் கணக்கு தொடங்கி அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வரவு வைக்கும். அவ்வாறு எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஊழியர்கள் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் போதும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Nov 2026 15:00 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கும் சேவையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) மேற்கொண்டு வருகிறது. அதாவது ஊழியர்களின் பெயர்களில் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு தொடங்கி, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வரவு வைக்கப்பட்டு வரும். அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு வட்டி

ஒருவேளை ஊழியர், பணத்தை எடுக்கவே இல்லை என்றால் அந்த பணம் அப்படியே பிஎஃப் கணக்கில் சேர்க்கப்பட்டு வரும். அவ்வாறு சேர்ந்துக்கொண்டே வரும் பணத்திற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வட்டியும் வழங்கும். இவ்வாறு பணத்தை எடுக்காமலே தொடர்ந்து பங்களிப்பு செய்து வரும் ஊழியர், தனது பணி ஓய்வுக்கு பிறகு அந்த பணத்தை ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : தங்கத்தை வாங்கி வைத்தால் தான் எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.. முக்கிய நிபுணர் அறிவுரை!

ஆன்லைன் மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்வது எப்படி?

இந்த நிலையில், ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள இணையதளம் மூலம்  பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்வது எப்படி?

1. முதலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. அங்கு ஊழியர்கள் தங்களது யுஏஎன் (UAN – Universal Account Number) எண், கடவுச்சொல் (Password), கேப்ட்சா (Captcha) உள்ளிட்டவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
3. இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
4. அதனை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
5. இபிஎஃப்ஓவின் முகப்பு பக்கம் திறந்தவுடன் அதில் இருக்கும் வியூ பாஸ்புக் (View Passbook) என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
6. அதில் பிஎஃப் கணக்கில் ஊழியரின் பங்களிப்பு எவ்வளவு உள்ளது, நிறுவத்தின் பங்களிப்பு எவ்வளவு உள்ளது என்பது தோன்றும்.

இதையும் படிங்க : SIP தெரியும், அது என்ன SIF.. பணக்காரர்களின் முக்கிய டார்கெட் இதுதான்!

மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது, மாதம் மாதம் முறையாக பணம் வரவு வைக்கப்படுகிறதா, அதற்கான வட்டி முறையாக வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us