24 வருசத்துக்கு முன்னாடி நாகேஷ் சார் கொடுத்த அட்வைஸ் இப்போ யூஸ் ஆச்சு – தனுஷ் சொன்ன விசயம்!
Dhanush talks about Mammotty | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் சமீபத்தில் ஓம் பட விழாவில் பேசிய போது நடிகர் மம்முட்டியின் நடிப்பு குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்டஹ்க்கது. கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலுமே படங்கள் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷின் நடிப்பில் திரையரங்குகளில் தொடர்ந்து தமிழ் மொழிப் படங்களே வரிசையாக வெளியாகி வருகின்றது. முன்னதாக நடிகர் தனுஷின் நடிப்பில் கர படங்கள் திரையரங்களில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஓ.எம்.
இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ள நிலையில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் புரமோஷன் விழாவில் தனுஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




நாகேஷ் சார் அப்ப கொடுத்த அட்வைஸ் இப்போ யூஸ் ஆச்சு:
நடிப்பு என்று தெரியாத வகையில் இயல்பாக நடிப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒருமுறை புகழ்பெற்ற நாகேஷ் சார் எனக்கு அறிவுரை வழங்கினார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு, மம்மூட்டி சாருடன் இணைந்து நடித்தபோது அந்த அறிவுரை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் கவனமாக இருந்திருக்காவிட்டால், அவர் என்னையே முழுமையாகக் கடந்து சென்றிருப்பார் (அதாவது, தனது நடிப்பால் என்னை முற்றிலுமாக ஓரங்கட்டியிருப்பார்). என்னவொரு வசீகரம்! என்னவொரு ஆளுமை! பாலு மகேந்திரா சார் இயக்கத்தில் வெளியான யாத்ரா திரைப்படத்திலிருந்தே என் மகனுக்கு யாத்ரா என்று பெயரிட்டேன் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 முதல் டாய்ரா வரை… பான் இந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் இதுதான்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dhanush about #Mammooty sir
“Legendary Nagesh sir once advised me to be careful with someone who doesn’t look like he’s acting. After 24 years, that advice came in handy while acting with Mammootty sir. If I hadn’t been careful, Enna mothama mudichu vitutu poiruparu.. 😃 What a charisma.. What an aura..❤️
My son’s name, Yatra, was derived from your film Yatra, directed by Balu Mahendra sir.”n https://t.co/l0hlgKUBJG— Movies Singapore (@MoviesSingapore) November 15, 2026
Also Read… திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சாதனைப் படைத்த அறிவு திரைப்படம் – கொண்டாட்டத்தில் படக்குழு