AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இதெல்லாம் ஏன்ட வெச்சிக்காதிங்க.. விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

Vijay Sethupathi Slams Jason Over Disrespect; தமிழில் விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் சீசன் 10. இன்று (13/11/2026) வார இறுதியான நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது விஜய் சேதுபதி ஜேசனிடம் கேள்விகளை கேட்ட நிலையில், அவர் அதற்கு அநாகரிகமாக நடந்துகொள்ளும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதெல்லாம் ஏன்ட வெச்சிக்காதிங்க.. விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 14 Nov 2026 17:01 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் மாதத்தில் ஆரம்பமான நிலையில், தற்போது 10 வது வாரத்தின் இறுதியை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்போது மொத்தமே 12 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த வாரத்தில் பிக் பாஸ் குரல் இந்த வீட்டில் கேட்காமல் இருந்த நிலையில், ஜூனியர் பிக் பாஸ் டாஸ்க் சிறப்பாக இருந்தது. மேலும் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தேவையில்லாத வாக்குவாதங்கள் மற்றும் தேவையில்லாத சண்டைகள் இந்த வீட்டில் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்று (13/11/2026) வார இறுதி என்ற நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம்.

அதனால் இந்த வாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், குரூப்பிஸம் மற்றும் டபுள் கேம் குறித்து கேள்வி கேட்கபோவதாக முதல் ப்ரோமோவில் பேசியிருந்தார். மேலும் தற்போது வெளியான 2வது ப்ரோமோவில், ஜேசன் விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளுவதாக காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இது மலையாளத் திரைப்படத்துறைக்கு நாங்கள் சமர்ப்பிக்கும் ஒரு சிறிய காதல் கடிதம்… நடிகர் சூர்யாவின் எமோஷ்னல் பதிவு

விஜய் சேதுபதியிடம் அநாகரிகமாக நடத்துக்கொள்ளும் ஜேசன்:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, தன்யா மற்றும் டிடிஃஎப் வாசன் இருவருமே வரவேண்டாமா?, இல்லை டிடிஃஎப் மட்டுமே வரவேண்டுமா என கேட்டிருந்தார். அதற்கு பதில் பேசிய ஜேசன், தன்யா – டிடிஃஎப் வாசன் இருவருமே ஒருவர்தான். என கூறி விஜய் சேதுபதியிடம் விளக்கி கொண்டிருந்தார். உடனே விஜய் சேதுபதி நேரடியாக பதிலை கூறுங்கள் என கூறியிருந்தார். உடனே ஆடியன்ஸ் பக்கத்தில் கைதட்டல் இருந்தது. உடனே ஜேசன் தனது முகத்தை மாற்றிக்கொண்டார். மேலும் தனது கையை உயர்த்தி அமைதி என்பதுபோல கூறினார். மேலும் விஜய் சேதுபதி, அவர் உங்களுக்கு கையை காட்டுகிறார் என ஆடியன்ஸ் பக்கத்தில் கூறியதும், மீண்டும் அவர்கள் கத்தினார்.

இதையும் படிங்க: சுயநலம்… ஸ்டேர்டஜி… குரூப்பிசம்… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!

உடனே ஜேசன், டிடிஃஎப் வாசனை கையை நீட்டி, “இவனுக்கு காய் தட்டுங்கள்” என கூறுவதுபோல அட்டிடியூட் காட்டினார். உடனே கோபப்பட்ட விஜய் சேதுபதி, ஜேசன் இதெல்லாம் வீட்டுக்குள்ள வெச்சுக்கோங்க ஜேசன்.. என்னிடம் வெச்சிக்காதிங்க ஜேசன், நல்ல இல்ல” என கோபத்துடன் பேசியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 69வது நாளின் 2வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

ஜேசன், விஜய் சேதுபதியிடம் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்ட விஷயம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டுவருகிறது. பலரும் இதற்க்கு எதிராக கருத்துக்களை சொன்னாலும், சிலர் ஜேசனின் செயலுக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர். இந்நிலையில் பலரும் ஜேசனுக்கு ரெட் கார்ட் கொடுக்கவேண்டும் எனவும் கூறுகிறார்கள். இன்று என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us