Suriya: சூரா சூரா.. 2 ஆண்டுகளை கடந்தது சூர்யாவின் கங்குவா திரைப்படம்!
2 Years Of Kanguva: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படும் நடிகராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் கூட்டணியிலும் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் கங்குவா. இப்படமானது ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்றுடன் (14/11/2026) இப்படம் வெளியாகி 2 ஆண்டுகளை கடந்துள்ளது.
சவுத் இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே சூர்யாவின் நடிப்பில் பேக் டூ பேக் 3 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. வெளியாகியிருந்த அந்த 3 திரைப்படங்களும் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகும் பேக் டூ பேக் படங்களை தனது கைவசம் சூர்யா வைத்துள்ளார். இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருந்த திரைப்படம்தான் கங்குவா (Kanguva Movie). இதை இயக்குநர் சிறுத்தை சிவா (Director Siruthai Siva) இயக்கியிருந்த நிலையில், மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.
இதில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருந்தார். இந்த படம் 2024 ஆண்டு நவம்பர் 14ம் தேதியில் வெளியானது. இன்றுடன் (14/11/2026) இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது.




இதையும் படிங்க: அன்பே சிவம் போன்ற படங்களை மீண்டும் இயக்காததற்கு இதுதான் காரணம் – இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்
சூர்யாவின் கங்குவா திரைப்படம் 2 ஆண்டுகளை கடந்தது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
2 Year’s Of #Kanguva……..🔥🌠
How Is This Film….🍿 https://t.co/A7lshBRZGH
— Movie Tamil (@_MovieTamil) November 14, 2026
கங்குவா திரைப்படம் தோல்வியில் முடிய என்ன காரணம்:
நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, ஸ்டூடியோஸ் க்ரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவரின் இசையில் இப்படத்தின் பாடலால் மற்றும் பின்னணி இசை அமைந்திருந்தது. இந்த படமானது 2024 நவம்பர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: முடிவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.. நடிகர் யாஷ் பகிர்ந்த விஷயம்!
இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலே படத்தில் அதிக ஒலி இருப்பதாகவும், அது படத்தை பார்ப்பதற்கு பெரும் தடையாக இருப்பதாக படத்தின் இண்டர்வெல் சமயத்திலே படத்தை பார்க்காமல் பாதி ரசிகர்கள் வெளியேறினார். இது இப்படத்தின் வரவேற்பு குறைய முதல் காரணமாக இருந்தது. பின் இப்படத்தின் கதைக்களத்தில் சில குறைகள் இருந்ததாக இணையத்தில் பேசப்பட்டுவந்த நிலையில், இந்த படத்திற்கு கிடையவிருந்த வரவேற்பும் கிடைக்காமல் போனது என கூறலாம். ஆனால் தற்போது இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இருக்கும் நிலையில், இன்றளவிலும் ரசிகர்களால் பார்வையிடப்படுகிறது.