சீன் படத்தின் பார்ட் 2 வருமா? இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
Director Jithu Madhavan Recent Speech Viral On Social Media | மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் தற்போது சீன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்களான ரோமாஞ்சம், ஆவேஷம் ஆகியப் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது திரைக்கதையில் சமீபத்தில் மலையால சினிமாவில் வெளியான பாலன் தி பாய் என்ற படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவன் தற்போது தமிழ் மொழியில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றி தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் அதிக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. திரையரங்குகளில் சீன் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல வதந்திகள் வெளியாகி வந்த நிலையில் அதுகுறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சீன் படத்தின் பார்ட் 2 வருமா? இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்:
இயக்குநர் ஜிது மாதவன் கூறுகையில், நான் ரோமாஞ்சம் 2 என்ற இரண்டாம் பாகத்தை மட்டுமே அறிவித்துள்ளேன். ஆவேஷம் 2 மற்றும் சீன் 2குறித்த தகவல்கள் வெறும் யூகங்களே. அவற்றை நான் அறிவிக்கவில்லை. கதையின் தொடர்ச்சி இருப்பது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தவே, சீன் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்களின் இறுதியில் கூடுதல் காட்சிகளைச் சேர்த்திருந்தேன், என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ஆவேஷம் 2 குறித்து ஒரு கட்டத்தில் பேசப்பட்டது உண்மைதான், ஆனால் இதுவரை எந்தவொரு ஆலோசனையோ அல்லது உறுதிப்படுத்தலோ நடக்கவில்லை. ஒரு இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் மட்டுமே அதைச் செய்ய முடியும். துல்கர் சல்மானுடன் ஒரு படம் உருவாகப்போவதாக வருவது வெறும் வதந்தி மட்டுமே, என்று குறிப்பிட்டார்.
Also Read… யோகி பாபுவின் அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Scene Press Meet – I have only announced the #Romancham2 sequel. #Aavesham2 & #Scene2 are just assumptions; I haven’t announced them. I wanted the audience to have a feeling that the story continues, which is why I included tail-end endings for #Scene & #Aavesham.
#Aavesham2 was told at one stage, but there are no discussions or confirmations yet there are a lot of factors to consider before making a sequel, and we have to do it at the right time. Project with #DulquerSalmaan are just rumours.
– #JithuMadhavan— Movies Singapore (@MoviesSingapore) November 11, 2026
Also Read… தேதி குறிச்சாச்சு… நாளை வெளியாகிறது தனுஷின் ஓம் படத்தின் ட்ரெய்லர் – வெளியானது அப்டேட்!