AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓம் படத்தில் சாய் பல்லவியோட வேடம் அந்த ஐபிஎஸ் இன்ஷ்பிரேஷன் தான் – ராஜ்குமார் பெரியசாமி!

Sai Pallavi's Om Chapter 1: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்துபுது படங்கள் உருவாகிறது. இவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் புதிதாக நடித்துள்ள படம் ஓம். இதில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கான நிஜ இன்ஷ்பிரேஷன் குறித்து இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஓம் படத்தில் சாய் பல்லவியோட வேடம் அந்த ஐபிஎஸ் இன்ஷ்பிரேஷன் தான் – ராஜ்குமார் பெரியசாமி!
சாய் பல்லவிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 20:10 PM IST

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தற்போது பான் இந்திய சினிமாவில் மக்களால் அதிகமாக கொண்டாடப்பட்டுவரும் நடிகையாக இருந்துவருபவர்தான் சாய் பல்லவி (Sai Pallavi). இவர் இறுதியாக பான் இந்திய மொழியில் வெளியான ராமாயணா பார்ட் 1 திரைப்படத்தில் (Ramayana Part 1), சீதா தேவியாக நடித்திருந்தார். ஏற்கனவே சாய் பல்லவியின் நடிப்பில் இந்த 2026 ஆண்டில் இரு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வரிசையில் 3வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓம் சாப்டர் 1 (Om Chapter 1). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கத்தில், தனுஷின் (Dhanush) நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் சாய் பல்லவி, முதல் முறையாக ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் இந்த ஓம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரமான நித்யா ரெட்டி வேடத்தின் நிஜ இன்ஷ்பிரேஷன் யார் என்பது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தொடங்கியது அஜித் குமாரின் டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்!

ஓம் படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் இன்ஷ்பிரேஷன் குறித்து சொன்ன ராஜ்குமார் பெரியசாமி:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அதில் “ஓம் படத்தில் நடிகை சாய் பல்லவி ஐபிஎஸ் நித்யா ரெட்டி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, கேரளா ஐபிஎஸ் மெரின் ஜோசப்தான் முன்மாதிரியாக இருந்தார்” அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் டிடிஎஃப் வாசன் மற்றும் ஜேசன் இடையே தள்ளுமுள்ளு – வெளியானது கலேபர வீடியோ

மேலும் நடிகை சாய் பல்லவி தனது நித்யா ரெட்டி வேடத்தில் மெரின் ஜோசப்பை போலவே பாப் கட் ஹேர்ஸ்டையில் இருந்த நிலையில், இணையத்தில் இதுகுறித்து பேச்சும் எழுந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி, மெரின் ஜோசப்புடன் தனது நேரத்தை செலவிட்டு பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஓம் படத்தில் நடிகை சாய் பல்லவி கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த ஓம் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் கடத்தல் தொடர்பான வித்தியாசமான கதைங்கலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் சிறப்பாகவே அமைந்துள்ளது. இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் 2026 நவம்பர் 13ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us