பிக்பாஸில் டிடிஎஃப் வாசன் மற்றும் ஜேசன் இடையே தள்ளுமுள்ளு – வெளியானது கலேபர வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்று யார் அடுத்த ஜூனியர் பிக்பாஸ் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் மொத்தம் போட்டியாளர்கள் 24 பேர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் எவிக்டான நிலையில் தற்போது இந்த 10-வது வாரத்தில் 13 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். இந்த 13 போட்டியாளர்களில் இருந்து யார் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்ற கேள்வி போட்டியாளர்களிடையே மட்டும் இன்றி பார்வையாளர்களிடையேயும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸின் குரல் இல்லாமல் ஜூனியர் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் ஜூனியர் பிக்பாஸாக வினோத் பாபு தேர்வானார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஜூனியர் பிக்பாஸாக முனியம்மாள் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது ஜூனியர் பிக்பாஸாக அன்சர் உள்ளார். அதனைத் தொடர்ந்து யார் அடுத்த ஜூனியர் பிக்பாஸ் ஆகுவார் என்பதில் பல குழப்பங்களும் பிரச்சனைகளும் நிகழ்ந்த் வருகின்றது.




பிக்பாஸில் டிடிஎஃப் வாசன் மற்றும் ஜேசன் இடையே தள்ளுமுள்ளு:
இந்த நிலையில் முதலாவதாக வெளியான புரோமோவில் தன்னை ஜூனியர் பிக்பாஸாக மாற்ற வேண்டும் என்று தன்யா அழுதுகொண்டே கேட்டதை ஜேசன் கிண்டலடிக்கும் விதமாக பேசினார். அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான புரோமோ வீடியோவில் ஜேசனிடம் அவர் ரேங்கிங் டாஸ்கில் எப்படி முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறித்து டிடிஎஃப் வாசன் பேசினார். இதன் காரணமாக ஜேசன் மற்றும் டிடிஎஃப் வாசனிடையே கைகலப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 10 வருட காதல் வாழ்க்கை.. காதலர் ராஜ் வேலுவை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day67 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/5JB5F876K9
— Vijay Television (@vijaytelevision) November 12, 2026
Also Read… பிச்சைக்காரன் 3 குறித்து விஜய் ஆண்டனி கொடுத்த முக்கிய அப்டேட் – வைரலாகும் தகவல்!