AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10 வருட காதல் வாழ்க்கை.. காதலர் ராஜ் வேலுவை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

Priya Bhavani Shankar Weds Raj Velu: சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் பிரியா பவானி சங்கர். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. இவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ் வேலு என்பவரை காதலித்துவந்த நிலையில், தற்போது இவர்களின் காதல் திருமணத்தில் இணைந்துள்ளது.

10 வருட காதல் வாழ்க்கை.. காதலர் ராஜ் வேலுவை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்!
பிரியா பவானி சங்கர் - ராஜ் வேலு,Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 11 Nov 2026 14:34 PM IST

தமிழில் ஆரம்பகாலகட்டத்தில் சின்னத்திரை சீரியலில் நடிகையாக நடித்துவந்தவர் பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar). இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக, அமீர் என்பவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்த நிலையில், பின் சினிமாவிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வரிசையில் இயக்குநர் ரத்தினகுமார் (Director Rathna Kumar) இயக்கத்தில் வெளியான, “மேயாத மான்” (Meyadha Maan) என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சினிமாவிலே தனது வாழ்க்கையை கழித்துவரும் நிலையில், தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் பணியாற்றிவருகிறார்.

இவர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே ராஜ் வேலு (Raj Velu) என்பவரை காதலித்து வந்தார்பிரியா பவானி சங்கர் மற்றும் ராஜ் வேலு இருவருமே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்துவந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள் – என்ன நடந்தது?

காதலர் ராஜ் வேலுவை கரம்பிடித்து நடிகை பிரியா பவானி சங்கர்:

நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் ராஜ் வேலு இருவருமே சிறந்த காதலர்களாக பல ஆண்டுகளாக காதல் வாழ்க்கையில் இருந்துவருகிறார். இவர்கள் இருவருமே வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது மற்றும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றிவருவது போன்ற விஷயங்களை செய்திருந்தனர்.

இதையும் படிங்க: அன் ஆர்டினரி மேன் படத்தின் 2-வது சிங்கிள் லார்டா லபக்கா ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

அந்த விதத்தில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றிருந்த நிலையில், இன்று (11/11/2026) சென்னையில் குடும்பத்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றிருந்தது. சிம்பிளான லுக்கில் பிரியா பவானி சங்கர் திருமணத்தில் கலந்துகொண்ட நிலையில், அது இணையத்தில் பேசும் பொருளாக உள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் ராஜ் வேலு திருமணம் குறித்த வீடியோ பதிவு:

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் இணைந்து நாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் உருவாகிவருகிறது. இவர் இறுதியாக ரவி தேஜாவுடன் இருமுடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், சூப்பர் குட் வெற்றியை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us