AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் முகாம் மீது துப்பாக்கிச்சூடு!

Terror Attack On CRPF Camp: இந்தியாவின் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்காம் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் முகாம் மீது துப்பாக்கிச்சூடு!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Nov 2026 15:49 PM IST

நவம்பர் 11, 2026: இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்காம் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) முகாமைக் குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு!


இதுதொடர்பாக சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்பகல் 2.15 மணியளவில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், குல்காமில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாமை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கொல்கத்தா-சைராங் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. 6 பெட்டிகள் சேதம்.. பயணிகள் பலர் காயம்..

2 வீரர்களுக்கு காயம்.. மருத்துவமனையில் அனுமதி

இந்தத் தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனந்த்நாக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: டெல்லி எனக் கூறி வங்கதேசத்தின் ஏழைப் பகுதிகளைப் படம்பிடிக்கும் சீனர்கள்.. இந்தியாவுக்கு எதிராகப் போலி பிரச்சாரமா? வெளியுறவு அமைச்சகம் கண்டனம்!

முன்னதாகவும் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது குல்காமில் சிஆர்பிஎஃப் முகாமைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூடு பாதுகாப்புப் படையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Follow Us