AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அது எனக்கு ரொம்ப பயமா இருந்தது.. சீன் படத்தின் கதை லீக் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!

Jithu Madhavan on Scene Story Leak: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பேமஸான மலையாள இயக்குநராக இருந்துவருபவர் ஜித்து மாதவன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான முதல் திரைப்படம்தான் சீன். இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜித்து மாதவன், சீன் பட கதை லீக்-ஆனது குறித்து தெரிவித்துள்ளார்.

அது எனக்கு ரொம்ப பயமா இருந்தது.. சீன் படத்தின் கதை லீக் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
சூர்யா மற்றும் ஜித்து மாதவன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Nov 2026 15:39 PM IST

மலையாள சினிமாவில் மூலமாக பிரபலமானவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan). இவர் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான “ரோமஞ்சம்” (Romancham) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தார். இவர் இயக்குநராக இயக்கியிருந்த முதல் திரைப்படமே இவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு ஃபகத் ஃபாஸிலின் ஆவேஷம் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இப்படமானது தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று, இயக்குநர் ஜித்து மாதவன் தமிழிலும் பிரபலமாக பேசப்பட்டார். அந்த வரிசையில் இவரின் நடிப்பில் 3வது வெளியாகியிருந்த திரைப்படம் சீன் (Scene Movie).

இதில் சூர்யா (Suriya), நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இணைந்து நடித்திருந்த நிலையில், 2026 நவம்பர் 6ம் தேதியில் வெளியாகியிருந்தது. அண்மையில் இப்படம் குறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் ஜித்து மாதவன் பேசியிருந்தார். அதில் அவர் சீன் படத்தின் வெளியீட்டிற்கு முன் பயந்த விஷயம் பற்றி பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: சீன் பட கதையை சூர்யா சாரிடம் சொன்னபோது… டேய் அடபாவி… இதெல்லாம் நான் செய்யனுமா என்று கேட்டார் – இயக்குநர் ஓபன் டாக்

சீன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சீன் படத்தின் ரிலீஸுக்கு முன் பயந்த விஷயம் குறித்து பகிர்ந்த ஜித்து மாதவன்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ஜித்து மாதவன், அதில் “சீன் படத்தில், சூர்யா சார் பார்வையற்ற கதாபாத்திரம் என்பது ரசிகர்களின் யுகம் இல்லை. அது லீக்கான தகவல். அவர் இப்படத்தில் பார்வையற்ற வேடத்தில் நடிக்கிறார் என நாங்கள் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. அந்தப் பார்வையற்ற தன்மை வெளிப்படுவதை மையமாக வைத்தே நான் முதல் பாதி முழுவதையும் உருவாக்கியிருந்தேன். முதல் பாதியின் பாதியில்தான் அவர் பார்வையற்றவர் என்பதைப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்.

இதையும் படிங்க: பிச்சைக்காரன் 3 குறித்து விஜய் ஆண்டனி கொடுத்த முக்கிய அப்டேட் – வைரலாகும் தகவல்!

அந்த வெளிப்பாட்டிற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரம் எப்படிச் சமாளிக்கிறது என்பதை வைத்தே முதல் பாதி முடிவடைகிறது. மேலும் இதுதான் நாங்கள் திட்டமிட்டிருந்த அமைப்பு. ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பே செய்தி கசிந்துவிட்டதால், அது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. டீசருக்குப் பிறகு, பார்வையாளர்கள் யூகிக்கத் தொடங்கின. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது இந்த செய்தி கசியாமல் இருக்க மிகவும் கவனமாக இருந்தோம்” என அதில் அவர் கூறியிருந்தார்.

Follow Us