AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள் – என்ன நடந்தது?

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது ஜீனியர் பிக்பாஸாக உள்ள முனியம்மாள் அவரது பதவியை விட்டு வெளியேற நினைப்பதாக கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள் – என்ன நடந்தது?
பிக்பாஸ் தமிழ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Nov 2026 14:03 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் பல டாஸ்குகள் இதுவரை நடைபெறாத புதிய டாஸ்குகளாகவே இருந்தது. இந்த நிகழ்சியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல்  இருக்கும் நிலையில் இதுவரை பிக்பாஸ் வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாக பிக்பாஸ் குரலே ஒலிக்காத ஒரு வாரமாக இந்த வாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் குரல் வழிநடத்தாமல் இருக்கும் நிலையில் இந்தப் போட்டியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரே ஜூனியர் பிக்பாஸாக இருந்து அந்த நிகழ்ச்சியை வழிநடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த பதிவிக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிவதற்கு முன்பு வினோத் பாபுவை ஜூனியர் பிக்பாஸாக மற்றப் போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். ஆனால் இந்த பதவியில் உள்ளவர்கள் ஒரு வாரத்தை கடந்தால் அவர் நேரடியாக ஃபினாலே செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டதும் மற்ற போட்டியாளர்கள் வினோத் பாபுவை அந்த பதவியில் தொடர கூடாது என்று முடிவு செய்து அவரை அந்தப் பதவியில் இருந்து கீழே இருக்க முடிவு செய்தனர். அதன்படி அவரை அந்தப் பதவியில் இருந்து கீழே இறக்கிய பிறகு அந்தப் பதவிக்கு முனியம்மாள் தேர்வாகி உள்ளார். இதுவரை வீட்டின் லீடராக கூட பதவி வகிக்காத முனியம்மாள் நேரடியாக ஜூனியர் பிக்பாஸ் பதவியை ஏற்றுள்ளார்.

ஜூனியர் பிக்பாஸ் பதவியிலிருந்து வெளியேற நினைக்கும் முனியம்மாள்:

மற்றவர்கள் தலைவர் பதவியில் இருக்கும் போது அவர்களிடம் தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டது மட்டும் இன்றி சண்டையை மூட்டி அதில் குளிர் காய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் ஜூனியர் பிக்பாஸாக அவர் பதவி ஏற்ற நிலையில் மற்ற போட்டியாளர்கள் முனியம்மாளிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன் அவரை நிலைதடுமாற செய்கிறார்கள். இதனால் மனமுடைந்த முனியம்மாள் இனி நான் இந்த பதவியில் நீடிக்க முடியாது என்பது குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நான் ராம் சரண் படத்தில் நடிக்கிறேனா? நடிகர் ரிஷிகாந்த் விளக்கம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆலுமா டோலுமா…. 11 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் வேதாளம் படம்!

Follow Us