பிச்சைக்காரன் 3 குறித்து விஜய் ஆண்டனி கொடுத்த முக்கிய அப்டேட் – வைரலாகும் தகவல்!
Pichaikkaaran 3 Movie Update Here | நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழ் சினிமாவில் முன்னாதாக வெளியான படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தின் இரண்டு பகங்கள் முன்னதாக வெளியான நிலையில் தற்போது மூன்றாவது பாகம் குறித்து விஜய் ஆண்டனி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது நாயகனாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் இசையமைப்பாளராக பணியாற்றிய போதே இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்த காரணத்தால் நாயகனாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அப்பா குட்டி.
இந்தப் படத்தை இயக்குநர் மு மாறன் எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் விழா ஒன்று சமீபத்தில் நடைப்பெற்றது. அப்போது அப்பா குட்டி படத்தைப் பற்றி விஜய் ஆண்டனி பேசியது மட்டும் இன்றி அடுத்ததாக உருவாக உள்ள பிச்சைக்காரன் 3 படம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பிச்சைக்காரன் 3 குறித்து விஜய் ஆண்டனி கொடுத்த முக்கிய அப்டேட்:
விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 3 திரைப்படம் உருவாகவுள்ளது. ‘கோடியில் ஒருவன்’ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கவுள்ளார். தற்போது இப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2027-ஆம் ஆண்டு ஆயுத பூஜையன்று இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று விஜய் ஆண்டனி வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அப்படியெல்லாம் படத்தில் இல்ல.. தனுஷ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VijayAntony about #Pichaikkaran Part 3
– I’m so happy to announce #Pichaikkaran3 at this event. We are expecting to release the movie on Ayudha Puja 2027, and the shooting work is progressing rapidly. https://t.co/OXpQqFLLQh— Movie Tamil (@_MovieTamil) November 10, 2026
Also Read… பிரதீப் ரங்கநாதனின் புதுப் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்