AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ஜூனியர் பாஸை மாற்றும் முடிவில் போட்டியாளர்கள்… எதிர்க்கும் முத்தழகி – அனல்பறக்கும் புரோமோ இதோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜீனியர் பிக்பாஸ் வீட்டை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரை மாற்ற வேண்டும் என்று போட்டியாளர்கள் எடுக்கும் முடிவிற்கு முத்தழகி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பிக்பாஸில் ஜூனியர் பாஸை மாற்றும் முடிவில் போட்டியாளர்கள்… எதிர்க்கும் முத்தழகி – அனல்பறக்கும் புரோமோ இதோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 13:04 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியில் டேக் லைனுக்கு ஏற்ப எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த வீட்டில் நாமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் இவர்கள் வெளியேறுவார்கள் இவர்கள் நிச்சயமாக ஃபைனலிஸ்ட் என்று எதிர்பார்க்கும் போட்டியாளர்கள் எதிர்பாராதவிதமாக அந்த வாரம் வீட்டில் இருந்து எவிக்டாகி வெளியேறிவார்கள். இந்த நிகழ்ச்சியில் எதுவுமே செய்யாமல் இவர்கள் என்ன செய்தார்கள் இத்தனை வாரங்களாக தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் வந்துகொண்டு இருக்கிறார்கள் என்று மக்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வார எவிக்‌ஷனிலும் எதிர்பாராத இரண்டு நபர்களான அக்‌ஷிதா மற்றும் அஸ்மிதா இருவரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிக்பாஸ் தமிழ் சிசன் 10 நிகழ்ச்சியில் 10-வது வாரம் பிக்பாஸின் குரல் ஒலிக்காமல் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு மனதாக வினோத் பாபுவை தேர்வு செய்து அவரை ஜூனியர் பிக்பாஸாக செயல்பட்டு வருகிறார். அவரை முன்பு தேர்வு செய்த போட்டியாளர்கள் இந்த வாரம் முழுவதும் ஜூனியர் பிக்பாஸாக செயல்பட்டால் அவருக்கு ஃபைனலிஸ்டாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரிந்ததும் அவரை அந்த பதவியில் தொடர வைக்க விருப்பம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

பிக்பாஸில் ஜூனியர் பாஸை மாற்றும் முடிவில் போட்டியாளர்கள்:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜூனியர் பிக்பாஸாக உள்ள வினோத் பாவுவை மாற்ற வேண்டும் என்ற மற்ற போட்டியாளர்கள் முடிவு செய்கிறார்கள். இதில் போட்டியாளர்கள் அனைவரும் வினோத் பாபுவிற்கு எதிராக வாக்கு அளிக்கும் போது முத்தழகி மட்டும் மறுக்கிறார். இதனால் வினோத் பாபுவை மாற்ற முடியாத சூழல் ஏற்படுகின்றது. இதனால் கடுப்பான போட்டியாளர்கள் முத்தழகியிடம் சண்டையிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டோரதி படத்தில் உங்களை கொலை செய்தது யார்? கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய விசயம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Keerthy Suresh: நான் நிறைய படத்துக்கு நோ சொல்லிருக்கேன்.. ஆனால் – கீர்த்தி சுரேஷ்!

Follow Us