AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் ஜூனியர் பாஸாக வேண்டும் என கேட்கும் ஜேசன்… ஹவுஸ்மேட்கள் எடுத்த முடிவு என்ன – வெளியானது வீடியோ!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸின் குரலே இல்லாமல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களே அவர்களில் ஒருவரை ஜூனியர் பிக்பாஸாக தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிக்பாஸில் ஜூனியர் பாஸாக வேண்டும் என கேட்கும் ஜேசன்… ஹவுஸ்மேட்கள் எடுத்த முடிவு என்ன – வெளியானது வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 10:23 AM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் காமென் மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் இருந்து 3 பேர் உட்பட மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வைல்கார்ட் போட்டியாளர்கள் மொத்தம் 5 பேர் பிக்பாஸ் தமிழ் சிசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக அனுப்பப்பட்டனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மீதம் 11 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது 9 வாரங்கள் முடிவடைந்து தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ளது.

தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத ஏன் பிக்பாஸ் வரலாற்றிலேயே எந்த மொழியிலும் இதுவரை நடைபெறாத ஒன்று நடைப்பெற்றுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலே ஒலிக்காமல் இந்த வாரம் செல்கிறது. நேற்று முதல் பிக்பாஸ் குரல் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருப்பவர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்து அவர்கள் ஜூனியர் பிக்பாஸாக இந்த நிகழ்ச்சியை வழிநடுத்துவார் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

பிக்பாஸில் ஜூனியர் பாஸாக வேண்டும் என கேட்கும் ஜேசன்:

அதன்படி நேற்று வினோத் பாபு ஜூனியர் பிக்பாஸாக தேர்வான நிலையில் அவர் மீது அதிருப்தியில் உள்ள போட்டியாளர்கள் அந்த பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால் இங்கு பெரும்பான்மை ஓட்டு தேவையில்லை. அந்த ஜூனியர் பிக்பாஸாக உள்ள போட்டியாளரை தவிற மற்றவர்கள் அனைவரும் வாக்களித்தால் மட்டுமே அந்த பதவியில் இருந்து அவரை மாற்ற முடியும்.

வினோத் பாபுவை மாற்ற நினைக்கும் போட்டியாளர்களில் ஒருவரான ஜேசன் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றால் தான் ஒரு நாளாவது ஜூனியர் பிக்பாஸாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வினோத் பாபுவே ஜூனியர் பிக்பாஸாக நீடிப்பார் என்பது வீடியோவைப் பார்க்கையில் தெரிகிறது.

Also Read… பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எப்போதும் நடைபெறாத ஒன்று… வைரலாகும் புரோமோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசியல் மீது வெறுப்பு இல்லை… ஆனால் – சூர்யா சொன்னது இதுதானா?

Follow Us