AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸில் இந்த வாரம் ஒன்னு இல்ல ரெண்டு எவிக்‌ஷன் இருக்கு… வைரலாகும் தகவல்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 9-வது வாரம் முடிவுக்கு எட்டியுள்ளது. இந்த வாரம் இரண்டு நபர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் இந்த வாரம் ஒன்னு இல்ல ரெண்டு எவிக்‌ஷன் இருக்கு… வைரலாகும் தகவல்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2026 10:48 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 9-வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். அதிலும் குறிப்பாக காமென் மேன் நிகழ்ச்சியில் இருந்து 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே நுழைந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் வகையில் டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை பிக்பாஸ் தமிழ் சீசன்களில் நடைபெறாத பல விசயங்களை இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் புகுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் அவர் தொகுத்து வழங்கும் போது போட்டியாளர்களிடையே எப்படி பேசுகிறார் என்பதைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியை ஒரு வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் இந்த வாரம் ஒன்னு இல்ல ரெண்டு எவிக்‌ஷன் இருக்கு:

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் மொத்தம் 9 பேர் இதுவரை வெளியேறினர். இந்த நிலையில் இன்று 9-வது வாரத்திற்கான எவிக்‌ஷன் நடைபெற உள்ளது. அதன்படி தற்போது இணையத்தில் வெளியான தகவலின்படி இன்று ஒரு போட்டியாளர் இல்லை இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது – இயக்குநர் எஸ்யு அருண்குமார் எமோஷ்னல் பதிவு!

அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் தற்போது உள்ள நிலையில் போட்டியாளர் அஸ்மிதா மற்றும் அக்‌ஷிதா இருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நோ எவிக்‌ஷன் இருக்கும் என்று எதிர்பார்த்தால் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு ஷாக்காக உள்ளது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அப்படிதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரத்தமும் இல்ல சத்தமும் இல்ல.. இந்த வாரம் போட்டியாளர்களை வெளுத்துவாங்க காத்திருக்கும் விஜய் சேதுபதி!

Follow Us