அவருக்கு கதை சொல்லவே தெரியல.. அந்த படத்தில் முதலில் நடிக்கமாட்டேன் என சொன்னேன்- அமலா பால் சொன்ன விஷயம்!
Amala Paul: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் அமலா பால். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராட்சசன் படம் பண்ணும்போது, ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் பற்றி அவர் தெளிவாக கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் அமலா பால் (Amala Paul). இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ஆர்யா (Arya) வரை பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தற்போது வெப் தொடர்கள் போன்றவைகள் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான “வீரசேகரன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக நுழைந்தவர் அமலா பால். இந்த படத்தை தொடர்ந்து, சிந்து சமவெளி மற்றும் மைனா (Mynaa) போன்ற படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதில் நடிகர் விதார்த் உடன் நடித்த மைனா என்ற படமானது இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பிரபலத்தை கொடுத்தது என்றே கூறலாம். இந்த படத்தை இயக்குநர் பிரபு சாலமோன் இயக்கியிருந்தார்.
மேலும் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான தலைவா என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது படங்களில் சிறு சிறு வேடங்களில் இவர் நடித்து வருகிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய அமலா பால், ஆரம்பத்தில் விஷ்ணு விஷாலுடன் (Vishnu Vishal) நடித்திருந்த “ராட்சசன்” (Ratsasan) படத்தில் நடிக்க மறுத்த காரணம் பற்றி தெளிவாக கூறியுள்ளார்.




இதையும் படிங்க : எனது கெரியரில் பெஸ்ட் பாடல்.. அதை பைக்கில் போகும்போதுதான் கம்போஸ் பண்ணேன் – ஜி.வி.பிரகாஷ் குமார்!
அமலா பாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :
View this post on Instagram
ஆரம்பத்தில் ராட்சசன் படத்தில் நடிக்க மறுத்தற்கு காரணம் பற்றி அமலா பால் பேச்சு :
நேர்காணல் ஒன்றில் பேசிய அமலாபால், ” ராட்சசன் படத்தி இயக்குநர் ஆரம்பத்தில் என்னிடம் கதையை சரியாகவே சொல்லவில்லை. சில இயக்குநர்கள் கதையும் நன்றாக சொல்வார்கள். ஆனால் ராட்சசன் பட இயக்குநர் ராம், மிகவும் திறமையானவர். அவரின் படம் எப்படி இருந்தது என்று எல்லாருக்குமே தெரியும். ஆரம்பத்தில் இயக்குநர் ராம் என்னிடம் கதையை தெளிவாகவே கூறவில்லை, நான் நினைத்தேன் ஒருவேளை தயாரிப்பாளர், அவரை கட்டாயப்படுத்தி அனுப்பிருப்பாரோ என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : ராஜா ராணி படத்தில் நாங்கள் தான் நடித்து இருக்க வேண்டியது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா
இயக்குநர் ராம் என்னை பார்க்கவே இல்லை, தலையை குனிந்தபடிதான் என்னிடம் இந்த கதையை கூறினார். நான் ஆரம்பத்தில் நடிக்கவிருப்பமில்லை என கூறிவிட்டேன். அதன் பிறகுதான் நடிகர் விஷ்ணு, என்னிடம் கால் பண்ணி பேசினார். இயக்குநர் ராம் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவைர், அதனாலதான் கதையை உங்களிடம் தெளிவாக சொல்லவில்லை என கூறினார். அதன் பின், விஷ்ணு விஷால் தன இப்படத்தின் கதையை என்னிடம் தெரிவித்தார். பின் ராட்சசன் படத்தில் இணைந்த பிறகுதான் தெரிந்தது, இயக்குனர் ராம் மிகவும் திறமையானவர் என்று” என நடிகை அமலா பால் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.