AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.2 லட்சம் பரிசு.. நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

Nammalwar Award 2026 Announced For Organic Farmers | இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது அறிவிப்பு. இந்த விருதுக்கு தகுதி பெறும் 5 விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.2 லட்சம் பரிசு.. நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Nov 2026 08:43 AM IST

அரியலூர், நவம்பர் 08 : தமிழகத்தில் (Tamil Nadu) இயற்கை விவசாயிகள் (Organic Farmers) நம்மாழ்வார் விருது (Nammalwar Award) பெற நவம்பர் 15, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து வெளியான அறிவிப்பு என்ன, அதற்கான தகுதிகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது அறிவிப்பு

நம்மாழ்வார் விருது குறித்து அரியலூர் மாவட்ட (Ariyalur District) வேளாண்மை இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை – ஏற்காட்டில் வீசப்பட்ட உடல் பாகங்கள் – பகீர் தகவல்கள்

நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். இந்த விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பம் செய்ய நவம்பர் 15, 2026 அன்று கடைசி தேதியாக உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யும் நபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரம் – 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்

விருது பெறும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு

இந்த விருதை பெற விவசாயிகள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது உயிர்ம விவசாயத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, உயிர்ம வேளாண்மைக்கான சான்றையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தகுதி உள்ள விவசாயிகள் 5 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. அதாவது, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் 5 விவசாயிகளுக்கு விருது, ரூ.2 லட்சம் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்புக்கொள்ளலாம்

இந்த விருது குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துக்கொள்ள விரும்பும் விவசாயிகள், விருது பெற விண்ணப்பிக்கும் முறைகள், அதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அந்த அந்த பகுதி வட்டார வேளாண்மை இயக்குநர்களை தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us