AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரையில் நவம்பர் 13 முதல் புத்தகத் திருவிழா.. 200க்கும் மேற்பட்ட அரங்குகள்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Madurai Book Festival 2026 : மதுரையில் 2026 ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் நவம்பர் 13, 2026 அன்று முதல் 11 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மதுரையில் நவம்பர் 13 முதல் புத்தகத் திருவிழா.. 200க்கும் மேற்பட்ட அரங்குகள்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Nov 2026 21:18 PM IST

மதுரை, நவம்பர் 7 : மதுரையில் வரும் நவம்பர் 13, 2026 அன்று முதல் நவம்பர் 23, 2026 11 நாட்கள் புத்தகத் திருவிழா (Book Fair) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும், மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நவம்பர் 13 முதல் புத்தகத் திருவிழா

தமிழகத்தில் பொதுமக்களிடையே புத்தக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரையில் 2026 ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் நவம்பர் 13, 2026 அன்று முதல் 11 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்க : மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த புத்தக திருவிழா வருகிற நவம்பர் 13, 2026 அன்று தொடங்கி, நவம்பர் 23, 2026 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நவம்பர் 13, 2026 மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் அவர்களுடன் பல்வேறு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படகிறது. தொடக்க விழாவில் அமைச்சர்கள் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக விற்பனை

மதுரை புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் சார்பில் புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கலை, இலக்கியம் மற்றும் அறிவுசார் தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க : இந்தியாவின் முதல் ஏஐ ஊழல்! – திமுக மீது அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த புத்தக திருவிழாவில் தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 6 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நைடபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசகர்களைக் கவரும் வகையில் சிந்தனை அரங்கம் நடைபெள்ளதாகவும் இதில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் வசதிக்காக உணவு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us