AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

23 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘சண்டியர்’.. கமல்ஹாசனின் முடிவுக்கு கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!!

Kamal Haasan's 'Sandiyar' Movie Title Controversy: புதிய படத்திற்கு 'சண்டியர்' என மீண்டும் தலைப்பு வைத்துள்ளதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதே எதிர்ப்புகள் இப்போதும் வரக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

23 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘சண்டியர்’.. கமல்ஹாசனின் முடிவுக்கு கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!!
கிருஷ்ணசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Nov 2026 13:13 PM IST

கோவை, நவ.07: தமிழ் சினிமா துறையில் தனது மாறுபட்ட நடிப்பாலும், வித்தியாசமான கதைக் களங்களாலும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவரும், அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளை ஒட்டி புதிய பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வழக்கமாகப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் நல்ல செய்திகளையும் வழங்கும் தருணமாக இருக்க வேண்டும் என்ற நிலையில், அவர் தனது புதிய படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் புயலையும் கிளப்பியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டிலும் இதே தலைப்பு பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்தித்த நிலையில், தற்போது 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: Kamal Haasan: கமல்ஹாசன் – அருண் குமாரின் படத்தின் டைட்டில் இதுவா? வெளியான அறிவிப்பு!

கடந்த கால எதிர்ப்பு, ஜெயலலிதாவின் தலையீடு:

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் பல முக்கியக் கருத்துக்களை முன்வைத்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தனது படத்திற்கு ‘சண்டியர்’ என்று பெயர் சூட்டியபோது, அப்பெயர் தென்தமிழகத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல்களையும் வன்முறையையும் உருவாக்கக் கூடிய அபாயம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அன்றைய காலகட்டத்தில் மக்கள் கொடுத்த தீவிர எதிர்ப்பின் காரணமாக, முதலமைச்சர் ஜெயலலிதா கமல்ஹாசனை நேரில் அழைத்து இப்பெயரை மாற்றும்படி அறிவுறுத்தியதை அடுத்து அந்தத் தலைப்பு மாற்றப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பழிவாங்கும் சிந்தனை குற்றச்சாட்டு:

தற்போது 23 ஆண்டுகள் கடந்த பிறகும், எந்தப் பெயர் கடுமையான எதிர்ப்புகளால் கைவிடப்பட்டதோ அதே பெயரை மீண்டும் தனது படத்திற்கு வைப்பது ஆணவப் போக்கைக் காட்டுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்தார். பிறந்தநாளில் நல்ல செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக, ‘பழிக்கு பழி’ என்ற கோணத்தில்தான் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது என்று குற்றம் சாட்டிய அவர், அன்று சாதாரண நடிகராக இருந்த கமல்ஹாசனுக்குப் பொறுப்புகள் குறைவாக இருந்ததாகவும், ஆனால் இன்று அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் சட்டத்தின் பிடிக்குள் இருக்க1க்கூடிய பொறுப்பான பதவியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: “தவெக அரசு மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறது”.. நீதிபதி குரியன் குழுவைக் கலைத்ததற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

அரசியல் பொறுப்பும், எச்சரிக்கையும்:

தற்போது மேலவை உறுப்பினராகவும், அரசியல் கூட்டணிகளின் ஆதரவு பெற்ற தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் தனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி எச்சரித்தார். சமுதாயத்தில் அமைதியைக் குலைக்கும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலோ திரைப்படங்களின் தலைப்புகள் இருக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us