AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kamal Haasan: கமல்ஹாசன் – அருண் குமாரின் படத்தின் டைட்டில் இதுவா? வெளியான அறிவிப்பு!

Kamal Haasan And Director Arun Kumar: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிவருகிறது. இவர் சித்தா பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாருடன் புதிய படத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kamal Haasan: கமல்ஹாசன் – அருண் குமாரின் படத்தின் டைட்டில் இதுவா? வெளியான அறிவிப்பு!
சண்டியர் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Nov 2026 18:08 PM IST

உலகநாயகன் என ரசிகர்களால் பாசம் மற்றும் நேசத்துடன் அழைக்கப்பட்டுவருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life Movie). இதை இயக்குநர் மணிரத்தினம் (Mani Ratnam) இயக்கியிருந்த நிலையில், எதிர்பார்த்திருந்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் இயக்குநர் நாக் அஸ்வின் (Nag Ashwin) இயக்கத்தில் கல்கி 2 (Kalki 2 Movie) படத்தில் தனது நெகட்டிவ் வேடத்தில் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் தனது கதாபாத்திரத்தின் ஷூட்டிங்கை விரைவில் கமல் முடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த வரிசையில் இவர் தமிழில் சித்தா, வீர தீர சூரன் பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் (SU. Arun Kumar) இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை (07/11/2026) கமல்ஹாசனின் பிறந்தநாளை என்ற நிலையில், இன்று (06/11/2026) படக்குழு டைட்டிலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தென்னிந்தியத் திரைத் துறை குறித்து வட இந்திய நடிகர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமாரின் படத்தின் டைட்டில்:

நடிகர் கமல்ஹாசன் மற்றும் எஸ்.யு.அருண் குமார் கூட்டணி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2026 அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

இதையும் படிங்க: பிக் பாஸ் சீக்ரட் டாஸ்க்.. முனியம்மாள் மீது சந்தேகப்படும் டிடிஃஎப் வாசன் – ப்ரோமோ வைரல்!

இப்படமானது விருமாண்டி படத்தை போலவே ஆக்ஷன் மற்றும் அதிரடி படமாக இருக்கும் என கூறப்பட்டது. தற்போது இதன் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு படக்குழு “சண்டியர்” (SANDIYAR) என டைட்டில் வைத்துள்ளது. தற்போது இதுகுறித்த முதல் பார்வை இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

கமல்ஹாசனின் புதிய படத்தின் டைட்டில் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் நிலையில், இன்னும் இப்படத்தில் எந்தெந்த பிரபலங்கள் நடிக்கிறார்கள் என அறிவிப்புகள் வெளியாகவில்லை. இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக இசையமைக்கிறார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us