AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Scene Movie: ஓ ஹிட்டா.. சீன் திரைப்பட FDFS பார்த்த இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!

Jithu Madhavan About Scene Movie : தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநராக இருந்துவருபவர் ஜித்து மாதவன். இவரின் இயக்கத்திலும், சூர்யாவின் நடிப்பிலும் இன்று (06/11/2026) வெளியாகியுள்ள படம் சீன். இப்படத்தின் FDFS பார்த்தபிறகு செய்தியாளர்களிடம் ஜித்து மாதவன் பேசியது குறித்து பார்க்கலாம்.

Scene Movie: ஓ ஹிட்டா.. சீன் திரைப்பட FDFS பார்த்த இயக்குநர் ஜித்து மாதவன் பேச்சு!
சீன் படம் பற்றி இயக்குநர் ஜித்து மாதவன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 06 Nov 2026 14:06 PM IST

மலையாளம் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan). இவர் மலையாள சினிமாவில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ரோமாஞ்சம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மலையாளத்தில் நுழைந்தார். இந்த படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் 2024ம் ஆண்டில் நடிகர் ஃபகத் ஃபாஸிலை (Fahadh Faasil) வைத்து ஆவேஷம் (Avesham Movie) என்ற திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பனிகிளி மற்றும் தி பாலன் போன்ற படங்களில் எழுத்தாளராக பணியாற்றியிருந்தார். அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் 3வது திரைப்படமாக அமைந்துள்ளதுதான் சீன் (Scene Movie). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) ஹீரோவாக நடிக்க, நஸ்ரியா (Nazriya) நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படமானது இன்று (06/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் FDFS காலை 6 மணி முதலே தொடங்கிய நிலையில், இதன் FDFS பார்த்தபிறகு செய்தியாளர்களை இயக்கினார் ஜித்து மாதவன் சந்தித்திருந்தார். அதில் அவர் என்ன பேசியிருந்தார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: பிக் பாஸில் 2 சீரியல் கில்லர்ஸ்.. போலீஸ் அதிகாரியாக டிடிஃஎப் வாசன் – சூடுபிடிக்கும் ஆட்டம் – ப்ரோமோ இதோ!

சூர்யாவின் சீன் படத்தின் FDFS பார்த்த ஜித்து மாதவன் பேச்சு:

சீன் படத்தை பார்த்த இயக்குநர் ஜித்து மாதவனிடம் செய்தியாளர்கள் சீன் படம் குறித்து கேள்வி கேட்டிருந்தனர். அப்போது பதிலளித்த ஜித்து மாதவன், ‘ ரசிகர்களுடன் படம் பார்ப்பது சிறப்பாக இருந்தது” என கூறியிருந்தார் உடனே செய்தியாளர் ஒருவர், தமிழில் நுழைந்த முதல் படமே ஹிட் கொடுத்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்டிருந்த நிலையில், அதற்கு ஜித்து , “ஓ ஹிட்டா” என சிரித்தபடியே பேசியிருந்தார்.

இதையும் படிங்க: தென்னிந்தியத் திரைத் துறை குறித்து வட இந்திய நடிகர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

மேலும் அவரின் அருகே இருந்த ரசிகர்கள் ஜித்து மாதவனிடம், “இது தீபாவளி வின்னர் சார், தேங்க்யூ சார். சூர்யா அண்ணாவ வெச்சு இவ்ளோ சூப்பர் ஆ எடுத்திருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் சார்.. வேற லெவல் சார்.. மஜா சார்.. மஜா சார்” என அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சீன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூர்யாவின் சீன் திரைப்படமானது இன்று (06/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. காலை 6 மணி காட்சிகள் முதல் இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது. தமிழில் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு தனி மற்றும் பெரிய நடிகரின் படமாக இந்த சீன் படம் அமைந்துள்ள நிலையில், நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us