AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nayanthara: தெய்வசக்தி Vs தீயசக்தி.. 90ஸ் படம் போல இருக்கிறதா மூக்குத்தி அம்மன் 2..? – விமர்சனங்கள் இதோ!

Mookuthi Amman 2 Review: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாராவின் அதிரடி ஆக்ஷன் நடிப்பில் இன்று (06/11/2026) வெளியாகியுள்ள மிக பிரம்மாண்ட திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்திற்கு மக்கள் கொடுக்கும் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Nayanthara: தெய்வசக்தி Vs தீயசக்தி.. 90ஸ் படம் போல இருக்கிறதா மூக்குத்தி அம்மன் 2..? – விமர்சனங்கள் இதோ!
மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Nov 2026 11:58 AM IST

பான் இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாகவே நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் இந்திய மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் ஏற்கனவே இவரின் நடிப்பில் ஹாய் மற்றும் டாக்ஸிக் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த படங்கள் இவருக்கு ஓரளவு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்திருந்த படம் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2). இதை இயக்குநர் சுந்தர் சி (Director Sundar C) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார்.

மிகவும் பிரம்மாண்டமான தெய்வீக திரைப்படமாக இப்படமானது இன்று (06/11/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான பத்தா படத்தை கொண்டாடும் ரசிகர்கள்… என்ன காரணம் தெரியுமா?

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் எப்படி இருக்கு:

இந்த மூக்குத்தி அம்மன் 2 மசாலாவும் அதிரடி ஆக்‌ஷனும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படம். இப்படத்தில் நயன்தாராவும் ஊர்வசியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நயன்தாரா தனது தெய்வீகமான திரைப் ஆராவால் மின்னுகிறார், அதே சமயம் சுந்தர் சி பக்தி, நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான பேண்டஸி உலகத்தை வழங்கியுள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிகர்களில் நடிப்பு எப்படி உள்ளது:

இப்படத்தில் நயன்தாரா மற்றும் ஊர்வசியின் காம்போ சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் ரெஜினா கசாண்ட்ரா ஒரு வலுவான நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளார். மற்ற நடிகர்களின் நடிப்பு இப்படத்தில் பெரிதாக எடுபடவில்லை என கூறலாம்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்:

இந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமானது 90ஸ் காலத்து அம்மன் கதையை கொண்ட, ஒரு நியூ ஜெனரேஷன் திரைப்படமாக அமைந்துள்ளது. பலரும் அவ்வாறே இந்த படத்தை கூறுகிறார்கள். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் குஷ்பு மற்றும் சினேகா என இரு நடிகைகளும் கேமியோ வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமாயணம் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? ப்ளஸ் மைனஸ் இவைதான்!

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இசை மற்றும் பாடல்கள்:

இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள நிலையில், அவரின் தெய்வீக பக்கம் இப்படத்தில் தெரிகிறது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் இப்படத்தில் சிறப்பாகவே அமைந்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை திரையரங்குகளில் அதிக சத்தமாக இருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுகிறது. ஆனால் இவரின் இசை உண்மையாகவே இப்படத்தில் வேலை செய்திருக்கிறது.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா?:

இந்த தீபாவளியில் திரையரங்குகள் சென்று குடும்பத்துடன் படம் பார்க்க எண்ணுபவர்கள் இப்படத்தை திரையரங்குகள் சென்றுபார்க்கலாம். சுந்தர் சி தனது நகைச்சுவை, தெய்வீகம் மற்றும் ஆக்ஷன் என இப்படத்தில் தனது கதையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us