AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தென்னிந்தியத் திரைத் துறை குறித்து வட இந்திய நடிகர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா!

Actor Regina Cassandra Recent Interview | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றி தென்னிந்திய திரைத்துறை மற்றும் வட இந்திய திரைத்துறை குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

தென்னிந்தியத் திரைத் துறை குறித்து வட இந்திய நடிகர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது – நடிகை ரெஜினா கசாண்ட்ரா!
ரெஜினா கசாண்ட்ராImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2026 18:38 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் பிறகு கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவ்வபோது இந்தி மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து நாயகியாக மட்டும் இன்றி சினிமாவில் வில்லியாகவும், சிறப்பு கதாபபத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இந்த நிலையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தற்போது தமிழ் மொழியில் நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்து உள்ள நிலையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி உள்ள இந்த மூக்குத்தி அம்மன் 2 படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தென்னிந்திய மொழி திரையுலகைப் பற்றி வட இந்திய நடிகர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கூறியது தற்போது வைரலாகி வருகின்றது.

தென்னிந்தியத் சினிமா குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்க கூடாது:

அதன்படி நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியதாவது இவ்வாறு கருத்து தெரிவிப்பது  வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே பிளவை ஏற்படுத்தும். நடிகர்கள் ஜான்வி கபூர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோருக்குத் தாங்கள் நடித்த படங்களில் ஏதேனும் சிக்கல்கள் இருந்திருந்தால், அவர்கள் அந்தப் படங்களில் நடிக்காமல் விலகியிருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், தர்மா புரொடக்‌ஷன் சார்பில் உருவான கேசரி என்ற படத்தில் நான் நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தும், அந்தப் படத்திலிருந்து எனது பெயர் நீக்கப்பட்டதாக ரெஜினா தெரிவித்துள்ளார். மேலும் இது தென்னிந்தியர்களுக்கு எதிரான பாரபட்சம் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… Om: செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே…. தனுஷின் ஓம் திரைப்படத்திலிருந்து வெளியான 3வது பாடல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Jailer 2: கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் ஜெயிலர் 2 திரைப்படம்…? ரஜினிகாந்த் ரசிகர்களே சர்ப்ரைஸ் இதோ!

Follow Us