AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீர் அதிகரிப்பு.. 5,586 கனஅடியிலிருந்து 7,041 கனஅடியாக உயர்வு..

Mettur Dam: மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்திலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 56.93 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 57.17 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீர் அதிகரிப்பு.. 5,586 கனஅடியிலிருந்து 7,041 கனஅடியாக உயர்வு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Nov 2026 19:15 PM IST

நவம்பர் 5, 2026: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. வினாடிக்கு 5,586 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 7,041 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் காவிரி டெல்டா பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை தமிழகத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க: தொப்புள் கொடியுடன் இருந்த பெண் குழந்தை.. முதலமைச்சர் விஜய் வீட்டின் அருகே வீசிச்சென்ற பெண்..

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்த அளவில் இருந்தது. வினாடிக்கு 5,586 கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது அது திடீரென அதிகரித்து வினாடிக்கு 7,041 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் நீர்மட்டம்

நீர்வரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டத்திலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 56.93 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 57.17 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: குடைக்குள் மழை தெரியும்.. அதென்ன ரயிலுக்குள் மழை.. நாகர்கோவில்- மும்பை விரைவு ரயிலில் நிகழ்ந்த கூத்தை பாருங்க!

அதேபோல், அணையின் நீர் இருப்பு தற்போது 22.62 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர், பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

மேலும் படிக்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நந்தி வாகனம் மீது ஏறி கோபுரம் சுத்தம் செய்த விவகாரம்.. ஊழியர் மீது பாய்ந்த நடவடிக்கை..

விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் நீர் இருப்பு மேம்படுவதுடன், எதிர்கால குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக, காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் அணையின் நீர்வரத்து மற்றும் நீர்மட்ட நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

 

Follow Us